#Udhayanidhi Stalin: “வந்த உடனே எல்லாம் கிடைக்கனுமா”.. உதயநிதியை ரைட் லெப்ட் வாங்கிய அமைச்சர்!!

Photo of author

By Rupa

DMK: அமைச்சர் துரைமுருகன் உதயநிதியை மறைமுகமாக தாக்கி கூட்டத்தில் பேசியது தற்பொழுது வைரலாகி வருகிறது.

திமுகவில் மூத்த நிர்வாகிகள் மற்றும் தலைவர்களுக்கிடையே உட்கட்சி மோதல் சமீப காலமாக அதிகரித்துவிட்டது என்றே கூறலாம். குறிப்பாக தனது வாரிசை தலைவர் அடுத்தடுத்து பதவிக்கு முன்னிறுத்தி வருவது தான் இதன் முக்கிய காரணம். கட்சி சார்ந்து உழைத்தவர்கள் பலர் இருக்கையில் வாரிசு என்ற காரணத்தினால் முன்னிறுத்துவது முற்றிலும் தவறானது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக உதயநிதியை துணை முதல்வர் பதவியில் உட்கார வைப்பதில் சிறிதளவு கூட அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளுக்கு ஈடுபாடில்லை. இதனால்தான் முதல்வர் செய்தியாளர்களை சந்தித்த பொழுது கூட, கோரிக்கை வலுத்துல்லுதே தவிர்த்து பழுக்கவில்லை என்று சூசகமாக பதிலளித்தார். இவ்வாறு இருக்கையில் இன்று திமுக சார்பாக நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் துறைமு முருகன் உதயநிதியை தாக்கும் விதமாக பேசியுள்ளார். அதில், இளைஞர்களை கட்சியில் நாங்கள் பெருமளவில் வரவேற்கிறோம்.

அவர்கள் கட்சியிலுள்ள எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு தடம் பார்த்து வரவேண்டும். வந்த உடனே அனைத்தும் கிடைக்க வேண்டும் என்று எதையும் எதிர்பார்க்காதீர்கள். கட்சிக்காக உழைத்தவர்கள், சிறைக்கு சென்றவர்கள் என்று பலர் உள்ளனர். கட்சிக்காக தியாகம் செய்தவர்கள் பலர் இருக்கையில் உடனே முன்னுக்கு வர நினைக்க கூடாது. இதை நினைத்தால் தான் ஒரு இயக்கத்தை சரிவர நடத்த முடியும் என்று உதயநிதியை டார்கெட் செய்யும் விதமாக பேசியுள்ளார்.