உதயநிதி து. முதல்வராவது உறுதி.. அவசர வசராமாக வந்த மூத்த அமைச்சர்கள்!! CM வீட்டில் நடந்த சீக்ரெட் மீட்டிங்!!

Photo of author

By Rupa

உதயநிதி து. முதல்வராவது உறுதி.. அவசர வசராமாக வந்த மூத்த அமைச்சர்கள்!! CM வீட்டில் நடந்த சீக்ரெட் மீட்டிங்!!

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கேடு அடைந்து விட்டதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் அதிரடியாக ஐஏஎஸ் மற்றும் மாவட்ட செயலாளர்கள் பலர் மாற்றம் செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அமைச்சரவையிலும் மாற்றம் வரப்போகிறது என்ற தகவல் வெளியானது. அதற்கேற்றார் போல் நேற்று திடீரென்று முதல்வர் ஸ்டாலின், மூத்த அமைச்சர்கள் 10 பேரை மட்டும் தனது இல்லத்திற்கு வரும்படி அழைத்துள்ளார்.

மேற்கொண்டு அவர்களிடம் கட்சி சம்பந்தமான அமைச்சரவை மாற்றம் குறித்து பேசி உள்ளார். செந்தில் பாலாஜி ED பிடியில் உள்ள நிலையில் பாஜக மேலிடம் மேற்கொண்டு அமைச்சர் எவ வேலு, பொன்முடி உள்ளிட்டவர்களை குறி வைத்து வருகிறது. இந்த நிலையில் அமைச்சரவையில் கட்டாயம் மாற்றம் செய்தால் மட்டுமே வருமானவரித்துறை அமலாக்கத்துறை என அனைத்திடமிருந்து சற்று தள்ளி இருக்க முடியும். அதேபோல தொடர்ந்து வரும் தேர்தல்களில் தாம் வெற்றி பெற்று வருவதாகவும் அதனால் மக்கள் மத்தியில் பெருமளவில் நமக்கு நற்பெயர் தான் உள்ளது எனவும் ஸ்டாலின் கூறியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

அதேபோல உதயநிதியை துணை முதல்வராக பதவி அமர்த்தவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். உடல்நிலை பரிசோதனை காரணமாக வெளிநாட்டு பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் கட்டாயம் நான் வெளிநாடு செல்லும் பொழுது துணை முதல்வர் பதவியில் உதயநிதி அமர்த்தப்பட வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளாராம்.

இதற்கு மூத்த அமைச்சர்கள் தாங்கள் முழுமூச்சாக இதற்கு சம்மதம் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். இதை வைத்துப் பார்க்கையில் கூடிய விரைவில் அமைச்சரவையில் மாற்றம் வருமென்றும் உதயநிதி துணை முதல்வராக போவது உறுதி என திட்டவட்டமாக தெரியவந்துள்ளது.