அன்பில் மகேஷிற்கே ஆப்பு வைக்கும் உதயநிதி!! உயிர் தோழனுக்கே இந்த கதியா??
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் திட்டத்தின் வேலைகள் சரியாக நடக்கின்றதா என்ற வகையில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அவ்வபோது மாவட்டம் தோறும் கள ஆய்வு செய்து வருகின்றனர். இவ்வாறு பெரிய திட்டங்கள் சரியாக வேலை நடக்கிறதா என்பதை கவனிக்க முதல்வரின் முத்தான திட்டங்கள் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் நேற்று சேலம் வந்தடைந்தார்.
இவரை அடுத்து இன்று உதயநிதி ஸ்டாலினும் சேலம் வந்தடைந்ததை அடுத்து, முதலாவதாக மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளியில் காலை உணவு திட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.தற்பொழுது உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கியதுடன் சிறப்பு திட்ட செயலாக்கு துறை பதவியும் வழங்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து மாவட்டங்களுக்கும் இவர் சென்று அந்த திட்டங்களை கண்காணிப்பதுடன் மற்ற அமைச்சர்களுக்கு ஒதுக்கியுள்ள பணிகளில் இவர் மூக்கை நுழைப்பதால் கட்சிக்குள் அதிருப்தி நிலவி வருவதாக கூறுகின்றனர்.
அந்த வகையில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அவ்வப்போது காலை உணவு மதிய உணவு மற்றும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உள்ள நிலையில் தற்பொழுது இதனை உதயநிதி செய்து வருவது அவருக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் என்கின்றனர்.
இதில் ஏதேனும் குறைகள் இருக்கும் பட்சத்தில், அது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது திரும்ப அதிக வாய்ப்புள்ளதாகவும் இதனால் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சற்று அதிருப்தியில் இருப்பதாகவும் அரசியல் சுற்று வட்டாரங்கள் கூறுகின்றனர்.
அமைச்சர் பதவி வழங்கியது முதல் முதல்வரிடம் அதிக நெருக்கத்தில் இருப்பவர் உதயநிதி என்றாலும் அவர் கூறும் உத்தரவிற்கு எந்த ஒரு மறுப்பும் யாராலும் தெரிவிக்க முடியாது என கூறுகின்றனர். இவ்வாறு அனைத்து துறைகளிலும் உள்நுழைந்து ஓவர் அட்வான்டேஜ் எடுத்துக் கொள்வது மற்றவர்களுக்கு கோபத்தை உண்டாக்குவதாகவும், தொடர்ந்து இதுபோலவே இருந்தால் கட்சிக்குள் மோதல் நிலவ அதிக வாய்ப்புகள் உள்ளது என பேசி வருகின்றனர்.