அமைச்சராகிறார் உதயநிதி.. அப்பா சொன்னால் சரி தான்! கொண்டாட்டத்தில் நிர்வாகிகள்!
இன்று அனைத்து மாவட்டங்களிலும் உதயநிதியின் பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாட உள்ளது. உதயநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு பல மாவட்டங்களில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மதுரையில் மத்திய அரசின் செல்வமகள் சேமிப்பு திட்டம் கீழ் வங்கி கணக்கானது ஆயிரம் பெண் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது.
இரு தினங்களுக்கு முன்பு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பொழுது 234 தொகுதிகளிலும் உதயநிதியை சொந்தம் கொண்டாடும் நிலைக்கு வர வேண்டும். இவருக்குள்ள திறமைக்கு அமைச்சர் பதவி கொடுக்கலாம் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
அதேபோல உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு நேற்று சென்னை மாநகர பேருந்துகளுக்கு பேருந்து நிறுத்தத்தை கூறும் தானியங்கி இயந்திரம் பொருத்தப்பட்ட 500 பேருந்துகளை உதயநிதி தொடங்கி வைத்தார்.
இதில் இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபு உட்பட போக்குவரத்து துறை அமைச்சர் சங்கர் கலந்து கொண்டார். உதயநிதிக்கு அமைச்சர் பதவி தர வேண்டும் என்று கோரிக்கை சமீப காலமாக பேச்சு தொடர்ந்து அடிபட்டுக் கொண்டே இருக்கிறது. அமைச்சர்களும் வரிந்து கட்டிக்கொண்டு இவருக்கு கட்டாயம் அமைச்சர் பதவி தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.இந்நிலையில் உதயநிதி தானியங்கி பொருத்தப்பட்ட 500 பேருந்துகளை தொடக்கி வைத்ததும் அங்குள்ள நிருபர்கள் உங்களுக்கு அமைச்சர் பதவி தருவதாக பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது என்று கேட்டுள்ளனர். உதயநிதி மறைமுகமாக, நான் அமைச்சராகுவது எனது அப்பாவின் கையில் தான் உள்ளது அவர்தான் முடிவு செய்ய வேண்டும் என்று சொல்லாமல் சொல்லிவிட்டார். இது வைத்து பார்க்கையில் உதயநிதி பிறந்தநாள் ஆன இன்று இவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் சொன்ன பதிலை வைத்து இவர் அமைச்சராக கூடிய விரைவில் வந்து விடுவார் என்று இவரது நிர்வாகிகள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.