துணிவு படத்தின் வசூலை அல்ல உதயநிதியின் பக்கா திட்டம்! முன்னாள் அமைச்சர் வெளியிட்ட பகீர் தகவல்!

0
176
Udhayanidhi's Baka project is not the collection of Thadhavu film! Ex-minister published Bhagir information!
Udhayanidhi's Baka project is not the collection of Thadhavu film! Ex-minister published Bhagir information!

துணிவு படத்தின் வசூலை அல்ல உதயநிதியின் பக்கா திட்டம்! முன்னாள் அமைச்சர் வெளியிட்ட பகீர் தகவல்!

வரும் பொங்கலுக்கு விஜயின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படம் வெளிவர உள்ளது. இரு பெரிய பிரபலங்களின் படம் வெளிவர உள்ளதால் சில சர்ச்சைகள் வெடிக்க ஆரம்பித்துள்ளது. வாரிசு படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ வெளியிட உள்ளது. இதே போல அஜித்தின் துணிவு படத்தை ஹச் வினோத் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிட இருக்கிறார்.

தற்பொழுது தமிழகத்தில் திமுக ஆட்சி நடைபெற்று வருவதால் தமிழ் சினிமாவில் வரும் ஒன்றிரண்டு படங்களை தவிர்த்து இதர படங்கள் அனைத்துமே உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் தான் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்பொழுது அஜித்தின் துணிவு படமானது பல தியேட்டர்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அந்த வகையில் பார்க்கும் பொழுது விஜயின் வாரிசு படத்திற்கு குறைந்த அளவு தியேட்டர்களே நிர்ணயிக்கப்படுவதாக கூறி வருகின்றனர்.

இது ஒரு பக்கம் இருக்கையில் வாரிசு படத்தை தெலுங்கு தயாரிப்பாளர்கள் ஆந்திராவில் வெளியிட தற்பொழுது எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பண்டிகை காலம் வரும் நிலையில் தெலுங்கு படங்களை மட்டுமே வெளியிட வேண்டும் என்று கூறுவதாக தெரிவித்துள்ளனர். கிட்டத்தட்ட ஆந்திரா மற்றும் தமிழகத்தில் வாரிசு படம் வெளியே வர எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் வெளியிடவுள்ள துணிவு படத்திற்கு அதிக அளவு தியேட்டர்களை கையாண்டு உள்ளதாக கூறுகின்றனர். இது குறித்து முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, துணிவு மற்றும் வாரிசு படம் ஒரே நேரத்தில் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. ஆனால் வாரிசு படம் வெளி வருவதில் பல சிக்கல்கள் உள்ளது.

இதற்கு முக்கிய காரணம் உதயநிதி ஸ்டாலின் தான். இவர் மட்டும் லாபம் அதிக அளவில் எடுக்க வேண்டும் என்று எண்ணி வாரிசுபடத்திற்கு தியேட்டர்களை குறைந்த அளவிலேயே ஒதுக்க திட்டமிட்டுள்ளார். இவ்வாறு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார். இதனைய டுத்து தெலுங்கு தயாரிப்பாளர்கள் வாரிசு படத்தை ஆந்திராவில் வெளியிட எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையில், லிங்குசாமி இயக்குனர் பேரரசு முதலியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Previous articleயாரெல்லாம் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்? மின்வாரியம் வெளியிட்ட தகவல்!
Next articleரேடிசன் ஹோட்டல் உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை? பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன?