உலக நாயகனுக்கு உதயநிதி அளித்த அதிர்ச்சி!! அமைச்சரானதும் கமலுக்கு வைத்த செக்!

0
146
Udhayanidhi's shock to the world hero!! A check given to Kamal when he became a minister!
Udhayanidhi's shock to the world hero!! A check given to Kamal when he became a minister!

உலக நாயகனுக்கு உதயநிதி அளித்த அதிர்ச்சி!! அமைச்சரானதும் கமலுக்கு வைத்த செக்!

விளையாட்டுத்துறை அமைச்சரானதும் இனிமேல் படங்களில் நடிக்க மாட்டேன் என உதயநிதி ஸ்டாலின் அறிவித்து இருப்பது , அவரை வைத்து படம் எடுக்கும் முடிவில் இருந்த கமலுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. முதல்வர் ஸ்டாலினின் மகனும் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியின் எம்.எல்.ஏ –வும் ஆன உதயநிதி இன்று காலை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.

பதவியேற்றதும் செய்தியாளர்களிடம் உதயநிதி தான் இனிமேல் படங்களில் நடிக்கப் போவதில்லை என்றும் இதனை பதவியாக கருதாமல் பொறுப்பாக உணர்ந்து செயல்பட போவதாக கூறினார்.இவரின் இந்த அறிவிப்பு ஆண்டவரை அதிர்ச்சியில் தள்ளியுள்ளது.

உதயநிதி தற்போது மாரி இயக்கத்தில் மாமன்னன் எனும் படத்தில் நடித்து வருகிறார். அமைச்சரானதும் இதுதான் உதயநிதி நடிக்கும் கடைசி படம் என்ற அறிவிப்பை அவர் வெளியிட்டது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு கமலுக்கு வைத்த செக்காக மாறியது.

விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பின் பல்வேறு படங்களை தயாரித்து வரும் உலக நாயகன் கமல், பல நல்ல படங்களை தயாரித்து வரும் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் உதயநிதியை வைத்து தனது  45-வது  படத்தினை  இயக்கப் போவதாக அதிகாரபூர்வமாக தெரிவித்து இருந்தார். உதயநிதியும் அதனை ஏற்றுக்கொண்டதோடு மட்டுமில்லாமல் கமலுக்கு தனது நன்றியையும் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் இன்று காலை உதயநிதி அமைச்சரானதும் படங்களில் நடிக்க போவதில்லை என்று கூறியிருந்தார். எனவே கமலின் படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.உதயநிதியின் இந்த முடிவு பற்றி அறிந்த கமல் அதிர்ச்சியானார்.இதற்க்கு முன்னால் ஆர்யா சம்பள பிரச்சனை காரணமாக கமலின் படத்தில் இருந்து விலகியதோடு, சிவகார்த்திக்கேயனை வைத்து கமல் தயாரிப்பதாக கூறிய படமும் என்ன ஆனது என்று தெரியவில்லை. இவ்வாறு ஒவ்வொரு நடிகர்களும் விலகி வரும் நிலையில் உதயநிதியும் விலகுவதாக அறிவித்தது திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு உதயநிதியின் இந்த முடிவுக்கு கமல் என்ன மறுமொழி கூறுவார் என்றும் திரைத்துறையில் சலசலப்பு ஏற்ப்பட்டுள்ளது.