சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபைத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்று இருக்கிறார். இந்த பதவியேற்பு விழாவில் திமுகவை சார்ந்தவர்களும் மற்றும் பிற அரசியல் கட்சித் தலைவர்களும் அதோடு ஸ்டாலினின் குடும்பத்தினரும், திமுகவின் முக்கிய தலைவர்களும், பங்கேற்றார்கள்.
திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக பதவி பிரமாணம் செய்த சமயத்தில் அவருடைய மனைவி துர்கா ஸ்டாலின் அவருடைய ஒரே மகன் உதயநிதி ஸ்டாலின் அவர்களும் ஆனந்த கண்ணீரில் இருந்தார்கள். இதற்குப் பின்னர் உதயநிதி முதலமைச்சர் ஆன ஸ்டாலினுக்கு புகைப்படம் ஒன்றை பரிசாக வழங்கி இருக்கின்றார்.
திராவிட இயக்கத்தின் தொடர்ச்சியாக – தமிழக முதல்வராக நம்மை வழிநடத்தவுள்ள கழக தலைவர் @mkstalin அவர்களுக்கு
— Udhay (@Udhaystalin) May 7, 2021
தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் இணைந்து, தலைவர் அவர்களை வாழ்த்துவது போன்ற ஓவியத்தை பரிசளித்தோம். இதனை வரைந்த ஓவியர் திரு.பிரேம் டாவின்சிக்கு அன்பும், நன்றியும். pic.twitter.com/DXw3tJrWAH
இதுதொடர்பாக, தன்னுடைய வலைதள பக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் திராவிட இயக்கத்தின் ஆரம்பமாக தமிழக முதல்வராக பொறுப்பேற்று நம்மை வழி நடத்த காத்திருக்கும் தலைவர் ஸ்டாலொனுக்கு பெரியார் அண்ணா கலைஞர் ஆகியோரின் ஒன்றிணைந்து வாழ்த்துவது போல ஒரு ஓவியத்தை பரிசாக வழங்கினோம். ஓவியத்தை வரைந்த பிரேம் டாவின்சிக்கு அன்பும் நன்றியும் என தெரிவித்திருக்கிறார்.
இதில் உதயநிதி மற்றும் அவருடைய மனைவி குழந்தைகள் உள்ளிட்டோர் இருந்தார்கள். இதில் உதயநிதியின் மகன் இளைஞர் அணியை குறிப்பிடும் வகையில் படம் பொருத்திய ஒரு சட்டையை அணிந்திருப்பது இப்போது ஒரு விவாதத்துக்கு உள்ளாகியிருக்கிறது.