முக்கிய நபரை விமர்சனம் செய்த உதயநிதி! கடும் கோபத்தில் மத்திய அரசு!

Photo of author

By Sakthi

திருவாரூரில் நடைபெற்ற பொதுமக்கள் மாணவ-மாணவிகள் மற்றும் சமூக அமைப்பினர் ஆகியோருடனான சந்திப்பின்போது பேசிய திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதய நிதி ஸ்டாலின் அவர்கள் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பிரச்சார பயணத்திற்கு கூடுதல் விளம்பரம் வாங்கி கொடுத்தது எடப்பாடியும் காவல்துறையும் தான் என்று தெரிவித்தார் ஆயிரக்கணக்கான காவல்துறையினரை குவித்த தீவிரவாதி போல நடத்தியிருக்கிறார்கள் பிரச்சாரம் மேற்கொள்ள கூடாது என காவல்துறையினர் என்னிடம் கெஞ்சினார்கள் அமைச்சர் நடந்து சென்றபோது கொரோனா பரவல் கிடையாதா என்று காவல் துறையிடம் நான் கேள்வி கேட்ட போது அது அவர்களுடைய கூட்டம் உங்களுக்கு தானாக கூட்டம் வருகின்றது என்று தெரிவித்தார்.

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தவுடனே திருவாரூரில் சட்டக்கல்லூரி அமைப்பது சம்பந்தமாக திமுகவின் தலைவர் ஸ்டாலினிடம் பேசி முடிவு செய்யப்படும் ஜெயலலிதா இருந்த வரையில் தமிழ்நாட்டில் நீட் தேர்வு நடத்தப்படவில்லை நீட் தேர்வு பயம் காரணமாக இதுவரை 15 மாணவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள் திமுக ஆட்சிக்கு வந்தவுடனேயே சட்டப்போராட்டம் நடத்தி நீட் தேர்வு தமிழகத்தில் இல்லாமல் செய்வோம் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி கட்சிகள் கூட வேளாண் சட்டத் திருத்த மசோதாக்களை எதிர்த்து பதவிகளை இருக்கின்றன ஆனால் அதிமுக அரசு ஆதரவு தெரிவித்து வருகின்றது விமானசேவை ரயில் சேவையை தொடர்ந்து வேளாண்மையில் கூட கார்ப்பரேட் நிறுவனங்களை உட்புகுத்த பாஜக அரசு திட்டமிட்டிருக்கிறது.

பாராளுமன்றத் தேர்தலில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணிக்கு நீங்கள் தண்டனை அளித்து விட்டீர்கள் அதேபோல சட்டசபை தேர்தலில் தண்டனை அளிப்பீர்கள் என்று கருதுகின்றேன் ஜெயலலிதா இறந்த பின்பு அவரின் இறப்பில் மர்மம் இருக்கிறது என்று முதலில் தெரிவித்தவர் ஓபிஎஸ் அதன் பின்பு துணை முதல்வர் பதவி கிடைத்ததும் அமைதியாகிப் போனார் இதற்கான காரணம் என்னவென்றால் ஜெயலலிதா மரணத்திற்கு ஓ பன்னீர்செல்வம் உடந்தையாக இருந்திருக்கிறார் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமையாது என்று நினைத்து இருந்தோம் ஆனால் அமிர்ஷா தமிழகம் வந்து கூட்டணியை உறுதி செய்து விட்டு சென்று விட்டார்

ஒரு வீட்டில் 2 கொள்ளையர்கள் நுழைகின்றார்கள் வீட்டில் இருப்பவர்கள் எழுந்தவுடன் முன்வாசல் வழியாக ஒரு கொள்ளையணும் பின்வாசல் வழியாக இன்னொரு கொள்ளையணும் வெளியே ஓட யாரை பிடிப்பது என்று தெரியாமல் இருப்பார்கள் ஆனால் இப்போது அதிமுக மற்றும் பாஜக 2 கொள்ளையர்களும் ஒரே வாசல் வழியாக தான் வாரப் போகின்றார்கள் என்று தெரிந்துவிட்டது வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அவர்களுக்கு நிச்சயமாக பாடம் புகட்ட வேண்டும் என்று தெரிவித்தார் உதயநிதி ஸ்டாலின்.