உடுமலை சங்கர் வழக்கு : சென்னை நீதி மன்றம் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு விவரம்

0
244
Udumalai Shankar Murder case Judgement Details-News4 Tamil Online Tamil News
Udumalai Shankar Murder case Judgement Details-News4 Tamil Online Tamil News

திருப்பூர் மாவட்டம் உடுமலை பேட்டையை சேர்ந்தவர் சங்கர் என்பவர்.இவருக்கும் கவுசல்யா என்பவருக்கும் கடந்த 2016 ஆம் திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணம் கவுசல்யாவின் பெற்றோர்களுக்கு எதிராக நடந்ததால் சங்கரை பேருந்து நிலையத்தில் வைத்து கவுசல்யாவின் உறவினர்கள் கொலை செய்தனர். எனவே கவுசல்யா கணவரின் கொலைக்கு காரணமாக தனது தந்தை மற்றும் உறவினர் மீது வழக்கு தொடுத்தார் .

இந்த வழக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு நீதிபதிகள் முன்னிலையில் விசாரணை செய்யப்பட்டு கவுசல்யாவின் தந்தை மற்றும் 8 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டு, தாய் அன்னலட்சுமி ,தாய் மாமன் பாண்டி துறை மற்றும் பிரசன்னா அவர்களுக்கு விடுதலை அளித்து தீர்ப்பளித்தது.

சில வருடங்களுக்கு பிறகு பறை இசை குழுவுடன் சேர்ந்து கவுசல்யா தனது வாழ்க்கை முறையை மாற்றி அமைத்தார்.பின்னர் பறை இசை குழு சக்தி என்பவரை மறுமணம் செய்து கொண்டார் கவுசல்யா.இத்திருமணம் தொடர்பாக பல தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் உடுமலை சங்கர் கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை உட்பட 6 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டதை எதிர்த்து செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் கவுசல்யாவின் தந்தைக்கு விடுதலை அளித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும் உள்ள 5 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து தீர்ப்பு அளித்துள்ளது. மேலும் கவுசல்யாவின் தாய் உள்ளிட்டோரின் விடுதலையையும் இந்த தீர்ப்பு உறுதி செய்துள்ளது.குற்றவாளிகளின் விடுதலையை எதிர்த்து காவல் துறை செய்த மேல்முறையீட்டு மனுவும் தள்ளபடி செய்யப்பட்டது

Previous article“இனி வேலைக்கு வேண்டாம்’ தனியார் பள்ளி நிர்வாக அறிவிப்பால் தள்ளுவண்டியில் தலைமை ஆசிரியர்!
Next articleதமிழகத்தில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு