தமிழகத்தில் கடந்த 23 ஆம் தேதி தமிழக முதல்வர் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு தவிர முதலாம், இரண்டாம் ஆண்டு கலை, அறிவியல் இளங்கலை படிப்புகளுக்கான தேர்வுகள் முதுநிலை பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு தேர்வுகள் மற்றும்,
இளநிலை பொறியியல் பட்டப்படிப்பில் முதலாம், இரண்டாம் மற்றும் 3 ஆம் ஆண்டு பருவத் தேர்வுகள்
இரத்து செய்யப்படுவதாகவும்
அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் இந்த பருவத் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு மாணவர்கள் அனைவரும் அடுத்த கல்வியாண்டிற்கு செல்ல அனுமதிக்கபடுவார்கள் என்றும் அறிவித்திருந்தார் மேலும் இதற்கான அரசாணை 27 ஆம் தேதி வெளியிடப்பட்டது.
அதன் பின்,இளங்கலை பொறியியல் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை ஆன்லைனில் நடத்த அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. மேலும் மென்பொருள் தயாரிப்பதற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும்,அரசின் அனுமதி கிடைத்ததும் முழு தகவல்களையும் வெளியிடப்பட இருப்பதாகவும் தகவல் வெளியானது.
இதனையடுத்து இறுதியாண்டு பயிலும் 31 மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது அப்போது பல்கலைக்கழக மானியக் குழு இறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்வதால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதை கருத்தில் கொண்டே இறுதியாண்டு தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளோம் மேலும் இது மாணவர்களுக்கு சரி செய்ய முடியாத பாதிப்பை எதிர்காலத்தில் ஏற்படுத்திவிடும் எனவே இறுதியாண்டு தேர்வுகளை ரத்து இயலாது என்று உச்சநீதிமன்றத்தில் UGC பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது.