கல்லூரிகள் திறப்பது எப்போது? – யூஜிசி அறிவிப்பு

Photo of author

By Parthipan K

கல்லூரிகள் திறப்பது எப்போது? – யூஜிசி அறிவிப்பு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டத்தைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் மார்ச் மாதத்தில் மூடப்பட்டன.

12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மட்டும் நடைபெற்ற நிலையில் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை அனைவரும் நேரடியாகத் தேர்ச்சி பெற்றதாகத் தமிழக அரசு அறிவித்தது. இன்னும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறாத நிலையில், கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி வரும் நிலையில் தேர்வு நடத்துவதா வேண்டாமா என்று ஆலோசனை நடைபெற்று வருகிறது.

அதே போல் கல்லூரிகளுக்கும் தேர்வு நடைபெறாத நிலையில், கொரோனா கட்டுக்குள் வந்து கல்லூரிகள் திறந்த பின் தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை எப்போது திறப்பது மற்றும் தேர்வுகளை நடத்துவது குறித்து பல்கலைக்கழக மானியக் குழு ஆய்வு செய்தது. இதனடிப்படையில் செப்டம்பர் மாதத்தில் கல்லூரிகளைத் திறக்கலாம் என மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்ததாகத் தகவல் வெளியானது.

இந்தநிலையில் இந்தியா முழுவதும் கல்லூரிகளை நெறிமுறை படுத்தும் UGC எனப்படும் பல்லைக்கழக மானியக்குழு, நெறிமுறைகளை அறிவித்துள்ளது.

அதில் கீழ்கணட நெறிமுறைகள் இடம்பெற்றுள்ளன.

  • கல்லூரிகளுக்கு அடுத்த கல்வியாண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்கும்.
  • முதலாமாண்டில் சேரும் மாணவர்களுக்குச் செப்டம்பர் 1-ம் தேதி கல்லூரிகள் துவங்கும்.
  • 12-ம் வகுப்புக்குப் பதிலாக நடத்தப்படும் மாநிலங்களில் பியூசி வகுப்புகளுக்கான இண்டர்மீடியட் செமஸ்டர் நடத்த வேண்டாம். அதற்கான மதிப் பெண் அகமதிப்பீடு அடிப்படையில் கணக்கிடப்பட வேண்டும்.
  • கரோனா சூழல் சரியானால் ஜூலை மாதம் டெர்மினல் செமஸ்டர் தேர்வை நடத்திக் கொள்ளலாம். அதேசமயம் நிலைமை சீரடையாவிட்டால் பின்னர் நடத்திக் கொள்ளலாம்.
  • இதுமட்டுமின்றி பல்கலைக்கழகங்கள் வேண்டுமென்றால் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்திக் கொள்ளலாம்.
  • தேர்வுக்கான பாடத்திட்டத்தைக் குறைக்க வேண்டும், தேர்வும் 3 மணி நேரத்திற்குப் பதிலாக 2 மணி நேரமாக குறைக்கப் பட வேண்டும்.