UGC எனும் யுனிவர்சிட்டி கிராண்ட் கமிஷன் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்திய அளவில் 24 பல்கலைக்கழகங்கள் போலியானவை என்ற தகவலை வெளியிட்டுள்ளது. இந்த யுஜிசி அமைப்பு அனைவருக்கும் சமமான தரமான உயர் கல்வியை வழங்குவதற்காக அமைக்கப்பட்டதாகும்.
யுஜிசி அமைப்பு, நடப்பு ஆண்டில் நடத்திய ஆய்வில், இந்தியாவிலுள்ள 24 பல்கலைக்கழகங்கள் போலியாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகங்களுக்கு பட்டம் அளிக்கும் அதிகாரமே இல்லை என்பதையும் திட்டவட்டமாக கூறியுள்ளது.
அதில் மகாராஷ்டிரா, கேரளா, புதுச்சேரி, ஆந்திர பிரதேஷ், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தலா 1 பல்கலைக்கழகமும் கொல்கத்தா மற்றும் ஒடிசாவில் தலா இரண்டு பல்கலைக் கழகங்களும் போலியானவை என்று யுஜிசியால் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் டெல்லியில் 7 பல்கலைக்கழகங்களும் உத்திரப்பிரதேச மாநிலத்தில் 8 பல்கலைக்கழகங்களும் போலியானவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகள் அனைத்தும் லக்னோ மாவட்ட நீதிபதியால் பரிசீலனை செய்யப்பட்ட பிறகே அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.