பிரிட்டனில் தொழிலாளர் கட்சி ஆட்சி! தேர்தலில் தமிழ்ப்பெண் வெற்றி 

0
338
UK Election Result in Tamil
UK Election Result in Tamil

பிரிட்டனில் தொழிலாளர் கட்சி ஆட்சி! தேர்தலில் தமிழ்ப்பெண் வெற்றி

பிரிட்டன் பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று ஜூலை 4 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த பிரதமா் ரிஷி சுனக் தலைமையிலான கன்சா்வேட்டிவ் கட்சி மற்றும் எதிர்க்கட்சி தலைவரான கியொ் ஸ்டாா்மா் தலைமையிலான தொழிலாளர் கட்சி போட்டியிட்டன.

அந்த வகையில் 650 தொகுதிகளில் நடைபெற்ற இந்த தேர்தலில் கன்சா்வேட்டிவ் கட்சியை தோற்கடித்து தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து வெற்றி பெற்ற தொழிலாளர் கட்சியின் சார்பில் கியொ் ஸ்டாா்மா் பிரதமராக பதவியேற்கவுள்ளார்.

இந்த தேர்தலில் இந்தியர்கள் அதிகமாக போட்டியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்தவகையில் தொழிலாளர் கட்சியின் சார்பாக போட்டியிட்ட தமிழ்ப்பெண் உமா குமரன் வெற்றி பெற்றுள்ளார்.அவர் லண்டன் ஸ்டராட்ஃபோர்டு தொகுதியில் 19,145 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட கன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளரான கேன் பிளாக்வெல் தோல்வியடைந்தது மட்டுமில்லாமல் நான்காம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். உமா குமரன் ஈழத்தமிழ்ப்பெண் எனவும், போருக்கு பின் பிரிட்டனில் குடியேறியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Previous articleபாமகவுக்கு எதிராக பரவிய வதந்தி! சுதாரித்துக் கொண்டு களமிறங்கிய அதிமுக 
Next articleகிணற்றில் நச்சு வாயு தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி!