வித்தியாசமான மற்றும் எளிதான வேலை! மாத சம்பளம் 2 லட்சம் ரூபாய் எப்படி தெரியுமா?

Photo of author

By Sakthi

எவ்வளவுதான் ஆயிரக்கணக்கான ரூபாயில் சம்பளத்தை அள்ளிக் கொடுத்தாலும் சிலர் எப்போதும் பார்க்கும் 9 மணி முதல் 5 மணி வரையிலான வேலைகளில் பெரிதாக ஆர்வம் காட்டுவது கிடையாது.

அதற்கு பதிலாக எளிதில் பணம் சம்பாதிக்க கூடிய குறைந்த நாட்கள் மட்டுமே வேலை செய்யக்கூடிய சுவாரஸ்யமான வேலைகளைத் தான் தேடுகிறார்கள்.

அப்படி லண்டனைச் சேர்ந்த பெண் ஒருவர் தனக்குப் பிடித்த வித்தியாசமான வேலைகளை செய்து மாதம் 2,000 டாலர் அதாவது இந்திய மதிப்பில் 2 லட்சம் ரூபாய் வரை சம்பாதித்து வருகிறார் என்றும் சொல்லப்படுகிறது.

இங்கிலாந்து நாட்டிலுள்ள யார்க்கை சார்ந்த 33 வயதான ஜெம்மா கடந்த 2014ஆம் வருடம் ஜெம்பாப்ஸ் கிராப்ஃட்ஸ் என்ற தன்னுடைய சொந்த கைவினைத் தொழிலை ஆரம்பித்தார். அதன் பிறகு கூடுதல் வருமானத்திற்கான ஆதாரங்களை பெறுவது குறித்து சிந்திக்கத் தொடங்கினார்.

ஆகவே கூடுதலாக பணம் சம்பாதிப்பதற்கான மிஸ்டரி ஷாப்பிங் மற்றும் இணையதள சர்வே கிளை மிகவும் குறைந்த கட்டணத்தில் செய்து வருகிறார் என்றும் சொல்லப்படுகிறது.

மிஸ்டரி ஷாப்பிங் என்பது குறிப்பிட்ட நிறுவனத்தின் கடைகள் உணவகங்கள் வங்கி போன்ற இடங்களுக்கு நேரில் சென்று அவர்கள் வாடிக்கையாளர்களிடம் எப்படி நடந்து கொள்கிறார்கள்.

எப்படிப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். எவ்வளவு நேரம் வாடிக்கையாளர்களை சேவைக்காக காத்திருக்க வைத்திருக்கிறார்கள், என்று ஆய்வு செய்வதாகும்.

அதேபோல இணையதள சர்வே மூலமாக குறிப்பிட்ட பொருட்கள் தொடர்பாக நீங்கள் கருத்து தெரிவிக்கலாம். இதற்கு பல நிறுவனங்கள் பணம் செலுத்துகின்றன இந்த வேலைகளைத்தான் இவர் செய்து வருகிறார்.

கைவினைப் பொருட்கள் விற்பனை நிலையத்தில் இருந்து அதிக அளவிலான வருமானம் வராவிட்டாலும் கூட இவர் அதனை பொழுதுபோக்கிற்காக நடத்தி வருவதாக தெரிவித்திருக்கிறார்.

அவர் தன்னுடைய தேவைகளை சமாளிப்பதற்கு தேவையான பணத்தை இது போன்ற மாற்று வழிகளிலிருந்து சம்பாதித்து வருகிறார் என்றும் சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக அவர் தெரிவிக்கும் போது நான் 2வது வருமானம் ஈட்டுவதற்காக பல்வேறு வழிகளை யோசிக்க தொடங்கினேன்.

என்னால் முடிந்ததை நானே கற்றுக்கொண்டேன் ஸ்டோரிலிருந்து கிடைக்கும் வருமானத்தை விட என்னுடைய மற்ற வேலைகளிலிருந்து கிடைக்கும் வருமானம் அதிகமானது என்று தெரிவித்தார்.

தற்போது அவர் சராசரி வேலைகள் மிகவும் சலிப்பான வேலை என்று கருதுவதாக சொல்கிறார் தன்னுடைய வருமானத்தில் 1000 டாலர்களை பூனைகளை பார்த்துக் கொள்வது, குறிப்பிட்ட பொருட்களை பற்றி கருத்து தெரிவிக்கும் குழுக்களில் பங்கேற்பது மூலமாக சம்பாதிக்கிறார்.

மிஸ்ட்ரி ஷாப்பிங் மூலமாக சுமார் 400 டாலர்களும், இணையதள சர்வே மூலமாக மாதம் 1000 டாலர்கள் சம்பாதித்து வருகிறார் என்றும் சொல்லப்படுகிறது.

அத்தோடு மட்டுமல்லாமல் இவர் தனக்கான இன்ஸ்டாகிராம் பக்கம் ஒன்றையும் நடத்தி வருகிறார் அதில் 2வது வருமானத்திற்காக என்ன மாதிரியான வேலைகளை செய்யலாம்.

அதன் மூலமாக எவ்வளவு வருமானத்தை ஈட்ட முடியும், உள்ளிட்ட தகவல்களையும் அவர் பகிர்ந்து வருகிறார். இதன் மூலமாக இவர் சமூக வலைதளங்களிலும் மிகவும் பிரபலமடைந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.