உக்ரைன் ரஷ்யா போர் விவகாரம்! தற்காலிகமாக ரஷ்யாவில் சேலைகளை நிறுத்திய வார்னர் மீடியா!

0
155

உக்ரைன் மீது கடுமையான போர் நடத்தி வரும் ரஷ்யாவுக்கு எதிராக பல்வேறு நாடுகள் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன இந்த சூழ்நிலையில், பல வெளிநாட்டு நிறுவனங்கள் ரஷ்யாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டில் தங்களுடைய வர்த்தகம் மற்றும் சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கின்றன.

அதனடிப்படையில், அமெரிக்காவைச் சேர்ந்த மிகப்பெரிய நிறுவனமான பெப்சி, கோகோ-கோலா மெக்டொனால்டு மற்றும் ஸ்டார் பாக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்களுடைய வர்த்தகத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்திருந்தனர்.. இந்த சூழ்நிலையில், வார்னர் மீடியா ரஷ்யாவில் அனைத்து புதிய வணிகங்களையும் தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்திருக்கிறது.

இது தொடர்பாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவிக்கும்போது இந்த சூழ்நிலையை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். சூழலை கருத்தில் கொண்டு எதிர்கால வணிக முடிவுகள் மேற்கொள்ளப்படும். இந்த சமயத்தில் எங்களுடைய எண்ணங்கள் உக்ரைன் மக்களுடன் இருக்கின்றன.

எங்கள் சேனல்களின் ஒளிபரப்பு உள்ளிட்டவற்றை ரஷ்யா நிறுவனங்களுடனான அனைத்து புதிய உரிமம் மற்றும் எங்களுடைய நாடகம் விளையாட்டுக்கள் உள்ளிட்ட வெளியீடுகளை நிறுத்துகிறோம் என தெரிவித்தார்.

ரஷ்யாவில் ஏற்கனவே சிஎன்என் ஒளிபரப்புகள் நிறுத்தியதுடன் வார்னர் மீடியாவின் வார்னர் பிரதர்ஸ் ரஷ்யாவில் தி பேட்மேன் திரைப்படத்தை வெளியிடும் திட்டத்தையும் நிறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleஉத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்? இன்று நடை பெறும் வாக்கு எண்ணிக்கை!
Next articleமுதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறும் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாடு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here