தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் படத்தில் நடிக்கவுள்ள உக்ரைன் நடிகை!
ஒரு தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமான சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘டாக்டர்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கி இருந்தார்.
‘டாக்டர்’ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது டான், அயலான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதில் ‘டான்’ படத்தை, சிவகார்த்திகேயன் லைக்கா புரோடக்சன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கி உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விரைவில் இப்படம் வெளியாக உள்ளது.
இதையடுத்து சிவகார்த்திகேயன் ‘அயலான்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான அனுதீப் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
சிவகார்த்திகேயனின் இந்த புதிய படத்திற்கான படப்பிடிப்பு கடந்த மாதம் பூஜையுடன் தொடங்கியது. இசையமைப்பாளர் தமன் சிவகார்த்திகேயனின் இந்த புதிய படத்திற்கு இசையமைக்கிறார். இந்த நிலையில், இந்த படத்தின் கதாநாயகி குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
அதன்படி இந்த படத்தில் உக்ரைன் நாட்டை சேர்ந்த நடிகை மரியா ரியாபோஷாப்கா நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இது குறித்த அறிவிப்பை சிவகார்த்திகேயன் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து தன்னுடன் நடிக்கவுள்ள உக்ரைன் நடிகைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.