ரஷ்யா மற்றும் உக்ரைன் உள்ளிட்ட நாடுகளுக்கிடையே கடந்த மாதம் 24ம் தேதி தொடர்ந்த போர் ஒரு மாதத்தை கடந்து தற்போதும் நடைபெற்று வருகிறது.இந்தப் போரை கட்டுப்படுத்துவதற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் முயற்சித்து வருகின்றன. இந்த போரை ரஷ்யா முடிவுக்குக் கொண்டு வரும் நிலையிலில்லை என்றே சொல்லப்படுகிறது.
தொடக்கத்தில் ரஷ்யா உக்ரைனின் மிரட்டுவதற்காக தான் இந்த போரை ஆரம்பித்தது என்று எல்லோராலும் பேசப்பட்டது. ஆனால் போர் தொடங்கி 1 மாத காலம் ஆகிவிட்ட நிலையிலும் கூட இந்தப் போர் முடிவை இதுவரையில் எட்டவில்லை.ஆகவே ரஷ்யா ஏதோ ஒரு பெரிய திட்டத்துடன் தான் இந்த போரை நடத்தி வருகிறது என்றும் கருதத் தோன்றுகிறது.
ரஷ்யாவின் அதிரடி தாக்குதல் காரணமாக, உக்ரைனின் பல முக்கிய நகரங்கள் ரஷ்யாவின் வசம் சென்றுவிட்டது அதோடு உக்ரைனின் மிகப்பெரிய துறைமுக நகரமான மரியுபோல் நகரை முழுமையாக கைப்பற்றுவதற்கு ரஷ்யப் படைகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். ஆனாலும் இது வரையில் அந்த நகரை ரஷியப் படைகள் கைப்பற்ற முடியவில்லை.
அதேபோல ரஷ்யா ராணுவம் உக்ரைன் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதற்காக முழுமூச்சுடன் அந்த நகரை நெருங்கி வந்து வந்துகொண்டிருக்கிறது. ஆனாலும் உக்ரைன் ராணுவம் தொடர்ந்து ரஷ்யப் படைகளின் முயற்சியை முறியடித்து அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
உக்ரைனில் ரஷ்ய ராணுவம் நடத்தி வரும் தாக்குதல் கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது நாட்டின் முக்கிய பகுதிகளில் ரஷ்ய ராணுவம் கைப்பற்றியிருக்கிறது. இதற்கு உக்ரைன் நாட்டு தரப்பிலும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.
2 நாடுகளுக்குமிடையே இதுவரையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் தான் முடிந்திருக்கின்றன. இன்றைய சூழ்நிலையில், மே மாதம் 9ம் தேதிக்குள் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ரஷ்யா விரும்புவதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்திருக்கிறது.
இதுகுறித்து உக்ரைன் ஆயுதப்படைகளின் உளவுத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, மே மாதம் ஒன்பதாம் தேதி ரஷ்யா ஜெர்மனியை போரில் வென்ற நாளாக கொண்டாடப்படுகிறது. அதன் காரணமாக, மாதம் 9ம் தேதிக்குள் போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று ரஷ்யா தங்கள் நாட்டு ராணுவத்திடம் தெரிவித்திருக்கிறது என கூறப்பட்டுள்ளது.