வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண்களை ஆற்றும் ஒரே மருந்து! தயார் செய்வது எப்படி?

Photo of author

By Sakthi

வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண்களை ஆற்றும் ஒரே மருந்து! தயார் செய்வது எப்படி?

Ulcer Treatment in Tamil: நம்மில் பலருக்கும் ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சனை என்னவென்றால் அது வாய்ப்புண் மற்றும் வயிற்றுப் புண் ஆகும். வாய்ப்புண் மற்றும் வயிற்றுப் புண்களால் பல பிரச்சனைகளை நாம் எதிர்கொள்கிறோம்.

வாய்ப்புண் வந்துவிட்டால் நம்மால் எந்த உணவையும் ஒழுங்காக சாப்பிட முடியாது. நாம் எந்தவொரு காரமாண உணவையும் சாப்பிட முடியாது. காரமாண உணவுகளை நாம் சாப்பிடும் பொழுது வாய்ப்புண்களால் எரிச்சல் ஏற்படும்.

அதே போல வயிற்றுப்புண்கள் இருக்கும் பொழுது நாம் பலவிதமான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றோம். வயிற்று எரிச்சல், வயிற்று வலி போன்ற பல பிரச்சனைகள் வரும். இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

* தேங்காய் பால்
* தேன்

செய்முறை:

ஒரு டம்ளர் அளவு தேங்காய் பால் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இதோ வாய்ப்புண் மற்றும் வயிற்றுப் புண்களை ஆற்றும் மருந்து தயார் ஆகிவிட்டது.

இந்த மருந்தை தினமும் காலையில் குடித்து வர வேண்டும். தினமும் காலையில் குடித்து வந்தால் வயிற்றுப் புண் ஆறி விடும். அதே போல வாய்ப்புண்களும் ஆறிவிடும்.