ஹாரிஸ் ராப் போன்று உம்ரான் மாலிக் ஃபிட்டாகவும் பயிற்சி இல்லாதவராகவும் உள்ளார்! பாகிஸ்தான் முன்னாள்  வீரர் கூறிய வித்தியாசம்! 

0
248

ஹாரிஸ் ராப் போன்று உம்ரான் மாலிக் ஃபிட்டாகவும் பயிற்சி இல்லாதவராகவும் உள்ளார்! பாகிஸ்தான் முன்னாள்  வீரர் கூறிய வித்தியாசம்!  

பாகிஸ்தானின் ஹாரிஸ் ராப் போன்று உம்ரான் மாலிக் பிட்டாகவும், நல்ல பயிற்சி இல்லாதவராகவும் இருக்கிறார் என  பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தெரிவித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டில் ஐபிஎல் தொடரில் அறிமுகமானவர் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக். இவர் அப்போதே 145 கிலோ மீட்டர் வேகத்தில் வந்து வீசி எதிரணி வீரர்களை திணறடித்தார். இவர் ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் இந்திய அணியிலும் இடம் பிடித்தார். இதனால் அப்போதைய கேப்டன் வீராட் கோலியின் பாராட்டுதலையும் பெற்றார்.

தற்போதைய இந்திய அணியில் 150 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் பந்து வீசக்கூடிய வீரர்களில் ஒருவராக உம்ரான் மாலிக் உள்ளார். தற்போதுள்ள இந்திய அணியில் முன்னணி வேக பந்துவீச்சாளர்களில் ஒருவரான உம்ரான் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சர்வதேச அளவில் 150 கிலோ மீட்டருக்கு மேல் பந்து வீசக்கூடிய வீரர்களில் ஒருவரான இவர் தற்போதைய நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஆடும் லெவனில் இடம்பெறாமல் வெளியே உட்கார வைக்கப்பட்டுள்ளார்.

இதுப்பற்றி பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகிப் ஜாவேத் மாலிக்கின் பந்துவீச்சு குறித்தும் அவரை ஹாரிஸ் ராப் உடன் ஒப்பிட்டு பேசியும் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில் உம்ரான் மாலிக் ஹாரிஸ் ராப் போன்று பயிற்சி பெற்றவர் அல்ல. அவரைப் பாருங்கள் முதல் ஸ்பெல்லில் 150 கிலோமீட்டர் வேகத்திற்கு அதிகமாகவும் 7-வது , 8-வது ஓவரில் பந்து வீசும் பொழுது அவரது வேகம் 140 கிலோ மீட்டர் கீழும் குறைகிறது. இது இந்திய பேட்டிங் வரலாற்றில் விராட் கோலிக்கும் மற்ற வீரர்களுக்கும் இடையேயான வித்தியாசத்தை போன்றதாகும்.

உம்ரான் மாலிக், ஹாரிஸ் ராப் போன்று பயிற்சி இல்லாதவராகவும், பிட்னஸ் இல்லாதவராகவும் இருக்கிறார். மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசுவது முக்கியமல்ல. போட்டி முழுவதும் அதே வேகத்தில் வீசுவது தான் முக்கியமானது.

ஹாரிஸ் ராப் வேகமாக பந்து வீசுவதற்காக தனது உணவு பழக்கம், வாழ்க்கை முறை, பயிற்சி என அனைத்தையும் மாற்றிக் கொண்டுள்ளார். குறிப்பாக வேகமாக பந்து வீசுவதற்காக அவரைப் போன்று உணவு கட்டுப்பாடு வைத்திருக்கும் வேறு ஒரு பாகிஸ்தான் பவுலரை நான் இதுவரை பார்த்ததில்லை. அவரைப் போன்ற வாழ்க்கை முறையையும் யாரும் பின்பற்றுவதில்லை என்றும் அவர் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

Previous article2022 ஆம் ஆண்டின் ஐசிசி ஆடவர் டி20 அணி!  இந்தியாவில் 3 வீரர்கள் தேர்வு! 
Next articleமீண்டும் வசூல் கிங் என நிரூபித்த தளபதி! துணிவை விட வாரிசு இவ்வளவு அதிக வசூலா? 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here