India Pakistan: காஷ்மீர் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலால் இந்தியா கொந்தளிப்பில் உள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக எல்லையில் போர் நடைபெற்று வருகிறது. இந்த ஆரம்ப கட்ட தாக்குதலில் பாகிஸ்தான் இதில் எனக்கு சம்பந்தமில்லை என தெரிவித்திருந்தது. ஆனால் அதனை யாரும் நம்பவில்லை. இது ரீதியாக ஐநா-வில் விவாதம் நடைபெற்றது. அதில், பாகிஸ்தான் தற்போது நடத்திய தாக்குதலுக்கு சம்பந்தமில்லை என கூறுவது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.
அதேபோல நடைபெற்ற தாக்குதலில் ஷல்கர்- ஏ- தொய்யா என்ற தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருக்கிறதா என்ற கேள்வியும் எழுப்பியுள்ளனர். தீவிரவாத தாக்குதலுக்கும் தங்களுக்கு சம்பந்தமில்லை எனக் கூறும் பாகிஸ்தான் தான் கட்டாயம் அணு ஆயுதத்தால் தாக்குதல் நடத்துவோம் என்று மிரட்டல் விடுத்தது. அதற்கு இந்த கூட்டத்தில் பெரும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. ஐநாவின் பொதுச் செயலாளர் பேசுகையில், இந்தியாவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் மிகவும் கொடுமை.
இது முழுமையாக கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. இந்த தாக்குதலில் யார் சம்பந்தப்பட்டாலும் அவர்களுக்கு தக்க தண்டனை கிடைக்க வேண்டும். இந்தியா பாகிஸ்தான் போரால் தற்பொழுது உள்ள நாடுகள் அச்சுறுத்தலில் உள்ளனர். குறிப்பாக இரு நாட்டின் பங்கு ஐநாவிற்கு மிகவும் முக்கியம். இவர்களின் இந்த உறவு முடிவடைந்த நிலையானது மிகவும் வருத்தத்திற்குரிய விஷயமாக கருதப்படுகிறது. உலக நாடுகள் அச்சுறுத்தலை தவிர்க்க இவர்கள் இருவரும் சமாதானம் செய்ய முயற்சிக்க வேண்டும்.
இந்த தாக்குதலுக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்று பாகிஸ்தான் வைக்கும் கருத்தை ஐநா நம்பவில்லை. வரும் நாட்களிலாவது பாகிஸ்தான் தீவிரவாதத்தை விடுத்து அதற்கு எதிரான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அப்படி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் பெரும் விளைவை சந்திக்க வேண்டியிருக்கும் என ஐநா எச்சரித்துள்ளது.