Crime, District News

+1மாணவிக்கு ஏற்பட்ட தாங்க முடியாத அவமானத்தால் மனம் வெறுத்து தற்கொலை! திருவண்ணாமலை அருகே பரபரப்பு!

Photo of author

By Sakthi

+1மாணவிக்கு ஏற்பட்ட தாங்க முடியாத அவமானத்தால் மனம் வெறுத்து தற்கொலை! திருவண்ணாமலை அருகே பரபரப்பு!

Sakthi

Button

திருவண்ணாமலையை சேர்ந்த 16 வயதுடைய மாணவி சென்னை கோவளத்தில் இருக்கின்ற ஒரு பழங்குடியினர் விடுதியில் தங்கி 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். வயிற்றுவலி காரணமாக, அவதிப்பட்ட அவரை பெற்றோர்கள் வீட்டுக்கு அழைத்து வந்த சூழ்நிலையில், கடந்த 7ஆம் தேதி திடீரென்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தார்.

அதன் பிறகு அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொண்டதில் 6 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரியவந்திருக்கிறது. இதன் காரணமாகவே மாணவி விஷம் குடித்து இருந்ததும் தெரியவந்தது.

இது தொடர்பாக அந்த மாணவியின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல்துறை விசாரணை நடத்தி மாணவியின் கர்ப்பத்திற்கு காரணமான கார் ஓட்டுநரான கள்ளக்குறிச்சியை சார்ந்த ஹரிபிரசாத் என்ற நபரை கைது செய்தார்கள்.

அதே சமயத்தில் அந்த மாணவி கர்ப்பமாக இருந்தது முன்னரே பள்ளி தலைமை ஆசிரியரான திண்டிவனத்தை சேர்ந்த குமரகுருபரன் மற்றும் திண்டிவனத்தை சேர்ந்த விடுதி காப்பாளர் செண்பகவள்ளி உள்ளிட்டோருக்கு தெரிந்து இருக்கிறது என்பதும் தெரிய வந்திருக்கிறது.

ஆனால் அவர்கள் குழந்தைகள் நல ஆணையத்திற்கும், காவல்துறையினருக்கும் மற்றும் மாணவியின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்காமல் மறைத்து இருந்தது இந்த காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து தலைமை ஆசிரியர் குமரகுருபரன் மற்றும் செண்பகவள்ளி உள்ளிட்டோரை விசாரணைக்குப் பின்னர் காவல்துறையினர் கைது செய்தார்கள். இந்த சூழ்நிலையில், மருத்துவமனையில் மாணவி சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்து இருக்கிறார்.

தமிழ்நாட்டில் 500க்கும் மேற்பட்ட இடங்களில் வாரம் தோறும் பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம்! சுகாதாரத்துறை அமைச்சர் பேட்டி!

விரைவில் தொடங்கவிருக்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்! பிரதமர் தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்!

Leave a Comment