தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின்வெட்டு இருந்து வருகிறது இதனை போக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்திருக்கிறார்.
தமிழ்நாடு முழுவதும் நிலவிவரும் அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாக, சென்னைவாசிகள் மட்டுமல்லாமல் கிராமப்புறங்களிலும் மிகுந்த அவதி அடைந்து வருகிறார்கள். பொதுமக்கள் குறிப்பாக சென்னையில் ஆங்காங்கே மாலை முதலே அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. அதே போல கிராமங்களிலும் விவசாயத்திற்கு நீர் பாய்ச்ச மின்சாரம் இன்றி விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார் விஜயகாந்த்.
திராவிடர் முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்துவிட்டால் மின்வெட்டு ஏற்படும் என்ற ஒரு கருத்து பொது மக்களிடையே பரவலாக இருந்து வருகிறது. ஆகவே தமிழக அரசு இதன் மீது உடனடியாக கவனம் செலுத்தி மின்சாரத்தில் குறைவில்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்ற வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.
நோய் தொற்று காரணமாக, போடப்பட்டிருக்கும் ஊரடங்கு பொருளாதார நெருக்கடியில் இருந்து வரும் பொதுமக்கள் மின் கட்டணத்தை செலுத்துவதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும். அதோடு உயர்ந்து வரும் மின் கட்டணத்தை குறைத்து பொது மக்களுக்கு உதவி புரியும் வகையில் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கின்றார்.