போதையில் மச்சானிடம் தங்கையை பெண் கேட்ட மாப்பிள்ளை:? அம்மிக் கல்லை போட்டு கொன்ற மச்சான்? இதுதான் காரணம்!

0
186

சென்னை ஆலந்தூரை அடுத்த ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த மணிகண்டன்(34)இவருடைய மாமாவின் பையன் எட்வின் (25)இவர்களின் இருவருக்குமிடையே ஏற்கனவே சொத்து தகராறு இருந்து வந்தது.அதுமட்டுமின்றி மணிகண்டனின் மீது 10க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் உள்ளது.மேலும் இவருக்கு திருமணம் ஆனதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்று மணிகண்டன் ஆதம்பாக்கத்தில் உள்ள எட்வின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.அங்கு இருவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர்.மேலும் மணிகண்டன் குடிபோதையில் உன் தங்கையை எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.உடனே கோபமடைந்த எட்வின் அமைதியாக இருந்துள்ளார்.அன்றிரவு மணிகண்டன் அவர்களின் வீட்டிற்குச் செல்லாமல் மாமா வீட்டிலேயே தங்கிவிட்டார்.

போதையில் மச்சானிடம் தங்கையை பெண் கேட்ட மாப்பிள்ளை:? அம்மிக் கல்லை போட்டு கொன்ற மச்சான்? இதுதான் காரணம்!
காலையில் எழுந்த எட்வினோ ஏற்கனவே சொத்து தகராறு உள்ள நிலையில் தற்போது திருமணம் ஆகிய பின்பும் தன் தங்கையை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்ட மணிகண்டனை கொல்ல திட்டமிட்டார்.இதனால் ஆத்திரத்தில் தூங்கிக்கொண்டிருந்த மணிகண்டனின் மீது அம்மிக்கல்லை தலையில் போட்டுவிட்டு அவ்விடத்தை விட்டு தப்பி சென்றார்.

மணிகண்டன் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மணிகண்டனின் உடலை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் தப்பிச் சென்ற எட்வினை பிடித்து விசாரித்தபோது தான் செய்த தவறை ஒப்புக்கொண்டு இதனால்தான் மணிகண்டனை கொலை செய்தேன் என்ற காரணத்தையும் கூறியுள்ளார்.

Previous articleமத்திய பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் காலமானார்!
Next articleகொரோனா தடுப்பூசி பரிசோதனை எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரியில் தொடங்கியது.!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here