கனடா நாட்டில் கட்டுக்கடங்காத காட்டுத் தீ… பீதியில் உறைந்த கனடா மக்கள்!!

Photo of author

By Sakthi

 

கனடா நாட்டில் கட்டுக்கடங்காத காட்டுத் தீ… பீதியில் உறைந்த கனடா மக்கள்…

 

கனடா நாட்டில் பரவி வரும் கட்டுக்கடங்காத காட்டுத் தீ காரணமாக 15000 வீடுகளை காலி செய்யுமாறு கனடா அரசு உத்தரவிட்டுள்ளது. கட்டுக்கடங்காத காட்டுத்தீ காரணமாக கனடா நாட்டு மக்கள் அனைவரும் பீதியில் உறைந்துள்ளனர்.

 

கனடா நாட்டின் மேற்கு எல்லையில் பிராந்தியம் பிரிட்டிஷ் கொலம்பியா உள்ளது. இது பெரிய, நீளமான நதிகளையும், பெரிய மரங்களையும் கொண்ட அடர்ந்த மற்றும் நீளமான மலைத் தொடரை கொண்ட பகுதியாகும்.

 

இந்த பகுதியில் திடீரென்று 100க்கும் மேற்பட்ட பகுதிகளில் தீ பற்றி எரியத் தொடங்கியது. இந்த தீ பெருமளவில் பரவி பெரிய காட்டுத் தீயாக மாறியது. இந்நிலையில் இந்த தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் போராடி வருகின்றனர். திடீர் தீ விபத்து காரணமாக இந்த பகுதி முழுவதும் அவசரநிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

சுமார் 36000 பேர் வசிக்கும் மேற்கு கெலோனா நகரம் முழுவதும் தீ பரவத் தெடங்கியது. இதையடுத்து இந்த பகுதியில் இருக்கும் 2400 வீடுகள் காலி செய்யப்பட்டுள்ளது. இதைப் போலவே எல்லோஃநைப் பகுதியில் காட்டுத்தீ மடமடவென்று பரவத் தொடங்கியுள்ளது.

 

இதனால் அங்கு வசிக்கும் பெரும்பாலான மக்கள் கார், விமானம் மூலமாக ஊரை காலி செய்து வருகின்றனர். காட்டுத் தீ பரவும் நகரில் வசித்து வந்த 20000 பேரில் 19000 பேர் ஊரை விட்டு வெளியேறி விட்டனர். மீதம் இருப்பவர்களில் உதவிக்குழுவை தவிர மற்ற அனைவரும் ஊரை விட்டு வெளியேறுமாறு சுற்றுச்சூழல் அமைச்சர் ஷேன் தாம்ப்சன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

மேலும் பரவி வரும் காட்டுத் தீ காரணமாக பிரிட்டிஷ் கொலம்பியா நகரில் 4000 வீடுகளில் வசித்து வரும் அனைவரையும் உடனடியாக வீட்டை காலி செய்து ஊரை விட்டு வெளியேற அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்பொழுது இந்த எண்ணிக்கை 15000ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

 

அதாவது அந்நகரில் உள்ள 15000 வீடுகளை காலி செய்யுமாறு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த எண்ணிக்கை 20000 ஆக அதிகரிக்க கூடும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

கனடா நாட்டில் மட்டுமே 1000 காட்டுத்தீ சம்பவங்கள் நடந்துள்ளது. மாறி வரும் பருவநிலை, அதிக வெப்பம் காரணமாக காட்டுத்தீ மேலும் பரவலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதிர்ஷ்ட வசமாக இந்த காட்டுத் தீ விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

காட்டுத் தீ ஏற்பட்டுள்ள கெலோனா நகரில் வான்வழி தீயணைப்பு படை விமானங்களுக்கு மட்டுமே பறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்ற பயணிகள் விமானங்கள் பறக்க காட்டுத்தீ காரணமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.