அரையிறுதிக்கு செல்லும் 4 அணிகள் இதுதான்!! கோப்பை இந்தியாவுக்குத்தான் டி.வில்லியர்ஸ் பதிவு வைரல்!!

0
30

அரையிறுதிக்கு செல்லும் 4 அணிகள் இதுதான்!! கோப்பை இந்தியாவுக்குத்தான் டி.வில்லியர்ஸ் பதிவு வைரல்!!

முன்னாள் தென்னாப்பிரிக்கா அணியின் அதிரடி கிரிக்கெட் வீரர் ஏபி.டி.வில்லியர்ஸ் அவர்கள் நடப்பாண்டு நடக்கவிருக்கும் உலகக் கோப்பை தொடருக்கு அரையிறுதிப் போட்டிக்கு செல்லும் 4 அணிகள் இது தான் என்றும் கோப்பை இந்தியாவுக்குத் தான் என்று கூறியுள்ளார்.

 

நடப்பாண்டுக்கான உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் அக்டோபர் 5ம் தேதி தெடங்குகின்றது. இந்த தொடரில் உலகக் கோப்பையை நடத்தும் இந்தியா, நடப்பு சேம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், நெதர்லாந்து, இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய 10 அணிகள் பங்கேற்கவுள்ளது.

 

அக்டோபர் மாதம் 5ம் தேதி நடக்கும் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி குஜராத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் உலகக் கோப்பை தொடரை முன்னிட்டு பலரும் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறும் அணிகள் எது கோப்பையை வெல்லப்போகும் அணி எது என்று கணித்து வருகின்றனர்.

 

அந்த வகையில் மிஸ்டர் 360 என்று அழைக்கப்படும் தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் ஏபிடி வில்லியர்ஸ் அவர்கள் நடப்பாண்டு உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டிகளுக்கு செல்லும் நான்கு அணிகளையும், இறுதிப்போட்டியில் விளையாடும் இரண்டு அணிகள் பற்றியும் கணித்துள்ளார். மேலும் கோப்பையை வெல்லப் போகும் அணி பற்றியும் கூறியுள்ளார்.

 

இது தொடர்பாக ஏபிடி வில்லியர்ஸ் அவர்கள் “இந்தமுறை நிச்சியமாக இந்திய அணி உலகக் கோப்பையை வெல்லும் என்று நான் நினைக்கிறேன். இது ஒரு வித்தியாசமான உலகக் கோப்பை தொடராக இருக்கும். இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய மூன்று பெரிய அணிகள் அரையிறுதி அணிக்கு செல்லும். 4வது அணியாக தென்னாப்பிரிக்கா அணி அரையிறுதிப் போட்டியில் இணையும்.

 

பாகிஸ்தான் அணியும் நான்காவது அணியாக முன்னேற வாய்ப்பு உள்ளது. ஆனால் தென்னாப்பிரிக்கா அணி அரையிறுதிக்கு 4வது அணியாக முன்னேறும் என்று நான் நம்புகிறேன். திறைமயான வீரர்கள் தென்னாப்பிரிக்க அணியில் உள்ளனர். ஆசியாவை சேராத இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா ஆகிய மூன்று அணிகளை நான் தேர்வு செய்துள்ளேன்.

 

இது கொஞ்சம் கடினமானதாக்கதான் உள்ளது. ஆனாலும் என்னுடைய முடிவில் உறுதியாக இருக்கிறேன். இந்தியாவில் உள்ள மைதானங்கள் நல்ல நிலையில் இருக்கும். மோசமான மைதானத்தை உலகக் கோப்பை தொடரில் பார்க்க வாய்ப்பு இல்லை. பார்க்கவும் முடியாது.

போட்டியை நடத்தும் இந்தியா அணியும், நடப்பு சேம்பியன் இங்கிலாந்து அணியும் இறுதிப் போட்டிக்கு செல்ல வாய்ப்புள்ளது. என்னை பொறுத்தவரை நான் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி இறுதிப் போட்டிக்கு செல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.