வேலைவாய்ப்பு இல்லாமல் தவிக்கும் ஆப்கானிஸ்தான் மக்கள்- தாலிபான்கள் ஆட்சியால் பின்னடைவு!

Photo of author

By Vijay

தாலிபான்கள், பல போராட்டங்களுக்கு பின்பு ஆப்கானிஸ்தானை கைப்பற்றினர். கைப்பற்றிய நாளில் இருந்து அந்நாட்டில் பல்வேறு பிரச்சினைகளை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். ஒருபக்கம் மக்களுக்கான சுதந்திரம் பெரும் கேள்வியாக இருந்தாலும், தற்போது வாழ்வாதாரம் கூட பெரும் பிரச்சனையாக உருவாகி உள்ளது.

2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய நாளிலிருந்து அந்நாட்டில் சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். இதில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் தான் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு வருத்தம் தெரிவித்துள்ளது.

தற்போதைய சூழ்நிலை தொடர்ந்தால், ஆப்கானிஸ்தானில் 2022 பாதியில் சுமார் 9 லட்சம் பேர் வேலைவாய்ப்பை இழக்கும் நிலை உருவாகும். இதனால் நாட்டின் பொருளாதாரமானது பெரிய சரிவை சந்திக்க நேரிடும்.

தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய ஆரம்பக் கட்டத்தில் இருந்து, நாட்டின் முக்கிய வர்த்தக பிரிவான விவசாயம், மக்களுக்கான சேவை, கட்டுமானம் ஆகிய அனைத்து முக்கியமான துறைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு; வேலை வாய்ப்புகளையும், வர்த்தகத்தையும் இழந்துள்ளது.