எதிர்பாராத ட்விஸ்ட்.. அண்ணாமலை இடத்திற்கு வரப்போகும் குஷ்பூ!! பதவியை ராஜினாமா செய்து திடீர் பரபரப்பு!!

Photo of author

By Rupa

எதிர்பாராத ட்விஸ்ட்.. அண்ணாமலை இடத்திற்கு வரப்போகும் குஷ்பூ!! பதவியை ராஜினாமா செய்து திடீர் பரபரப்பு!!

நேற்று(ஆகஸ்ட்14) நடிகையும் பாஜக உறுப்பினருமான குஷ்பு அவர்கள் தன்னுடைய தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து இவருக்கு ஆளுநர் பதவி வழங்கப்படுமா அல்லது பாஜக கட்சியின் மாநில தலைவர் பதவி வழங்கப்படுமா என்ற சர்ச்சைக்கு பாஜக தரப்பினர் பதில் அளித்துள்ளனர்.

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை திடீரென்று ராஜினாமா செய்த குஷ்பூ அவர்கள் “திடீரென்று ராஜினாமா செய்யவில்லை. சில நாட்களுக்கு முன்னரே ராஜினாமா கடிதத்தை நான். தேசிய மகளிர் ஆணையத்திடம் கொடுத்து விட்டேன். தற்பொழுது ராஜினாமா செய்துள்ளேன். இதற்கு எந்தவித அழுத்தமோ அல்லது வேறு எந்த காரணமோ இல்லை” என்று கூறினார்.

இந்நிலையில் பாஜக மாநிலத் தலைவர் பதவி வழங்கப்படலாம் அல்லது ஆளுநர் பதவி வழங்கப்படலாம் என்று தகவல்கள் பரவி வந்தது. இதற்கு தற்பொழுது பாஜக தரப்பினர் பதில் அளித்துள்ளனர்.  அதாவது பாஜக தலைவர் பதவியில் தற்பொழுது இருக்கும் அண்ணாமலை அவர்களுக்கு பதிலாக குஷ்பு அவர்களுக்கு பாஜக மாநிலத் தலைவர் பதவி வழங்கப்படும் என்று பரவி வந்த தகவலுக்கு பாஜக தரப்பினர் “தற்பொழுது பாஜக கட்சியின் மாநிலத் தலைவராக இருக்கும் அண்ணாமலை மீது டெல்லி பாஜகவிற்கு நல்ல ஒரு எண்ணம் இருக்கின்றது. டெல்லி பாஜக கட்சி அண்ணாமலைக்கு ஆதரவாக இருக்கின்றது.

அண்ணாமலை அவர்கள் தான் தமிழகத்தில் கட்சியை வளர்த்தார். ஒற்றை இலக்கத்தில் இருந்த வாக்கு வங்கியை இரட்டை இயக்கத்திற்கு மாற்றியது அண்ணாமலை தான் என்ற எண்ணம் டெல்லி பாஜக கட்சிக்கு இருக்கின்றது. இருப்பினும் அண்ணாமலை அவர்கள் வெளிநாடு செல்லவுள்ளதில் மட்டும் டெல்லி பாஜகவிற்கு எதிர்ப்புகள் இருக்கின்றது. மற்றபடி அண்ணாமலை அவர்களுக்கு எதிராக எந்தவொரு நிலைப்பாடும் இல்லை. அதே போல தற்போதைக்கு தலைவர் பதவியில் மாற்றம் கொண்டு வருவது என்பது இன்னும் உறுதியாகவில்லை. இது குறித்து டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் அடுத்து தமிழகத்தின் பாஜக கட்சியின் மாநிலத் தலைவராக யார் நியமிக்கப்படுவார் அவர்தற்காலிக தலைவரா என்பது குறித்து விரைவில் தெரியவரும். இப்படி இருக்கும் சூழ்நிலையில் குஷ்பு அவர்களுக்கு தலைவர் பதவி வழங்கப்படாது” என்று கூறினர்.இதே போல தற்பொழுது தான் இந்தியாவில் நிறைய மாநிலங்களில் ஆளுநர் பதவிகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. பஞ்சாப், தெலங்கானா, மகாராஷ்டிரா, மணிப்பூர், ராஜஸ்தான், மேகாலயா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் ஆளுநர் பதவியில் புதிதாக ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் புதிதாக ஆளுநர் பதவியும் குஷ்புவிற்கு வழங்கப்படாது என்று பாஜக தரப்பினர் கூறியுள்ளனர்.