மின்சார ரயில் மோதியதன் காரணமாக அடையாளம் தெரியாத நபர் உயிரிழப்பு!

Photo of author

By Hasini

மின்சார ரயில் மோதியதன் காரணமாக அடையாளம் தெரியாத நபர் உயிரிழப்பு!

Hasini

Unidentified person killed in electric train collision

மின்சார ரயில் மோதியதன் காரணமாக அடையாளம் தெரியாத நபர் உயிரிழப்பு!

சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே சானிக்குளம் பகுதியில் இருந்த ஒரு  தண்டவாளத்தில் தலை மற்றும் கைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் 30 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். இதைக் கண்ட அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே அந்த இடத்திற்கு விரைந்து வந்த சென்ட்ரல் ரயில்வே போலீசார் அந்த உடலை மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தண்டவாளத்தை கடக்கும்போது விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.

மேலும் மின்சார ரயில் அங்கே வரும் போது அந்த வாலிபர் தண்டவாளத்தை கடந்து இருக்கலாம் என்றும் தெரிவித்தனர். மேலும் அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்ற விவரங்களை சேகரிக்க தற்போது வரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எவ்வளவு தான் படித்தாலும், மற்றவர்கள் அறிவுரை கூறினாலும் ரயில் தண்டவாளங்களை தாண்ட வேண்டாம் என்று சொன்னாலும் யாரும் அதை கவனத்தில் கொள்வதில்லை. ஏதோ ஒரு காரணத்தினாலும், அவசரத்தினாலும் இந்த தவறை செய்து உயிரை மாய்த்துக் கொள்கின்றனர்.