ஒரே நாடு.. ஒரே ஆர்.சி. புக்.. ஒரே ஓட்டுநர் உரிமம்..! அக்டோபர் 1 முதல் புதிய மாற்றங்கள்..!! மத்திய அரசு!

0
133

நாடு முழுவதும் ஒரே மாதிரியான வாகனப் பதிவு அட்டை (ஆர்.சி. புக்) மற்றும் ஓட்டுநர் உரிமம் வழங்கும் புதிய நடைமுறையை வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் அமல்படுத்த உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மோட்டார் வாகன விதிமுறையின்படி நாடு முழுவதும் உள்ள வாகனங்களின் ஆவணங்கள் மற்றும் விவரங்கள் அனைத்தும் மின்னணு வடிவத்தில் மாற்றப்பட உள்ளது. அந்த வகையில், நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஆர்.சி. புக் மற்றும் ஓட்டுநர் உரிமம் போன்ற புதிய மாற்றங்கள் வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் கொண்டுவரப்பட உள்ளது.

அந்த ஓட்டுநர் உரிமத்தில் கியூ.ஆர். கோடு (QR Code) மற்றும் நவீன மைக்ரோ சிப் இருக்கும். இதன் மூலம் வாகன ஓட்டுனர் செலுத்திய அபராதத் தொகை மற்றும் தண்டனை அடங்கிய 10 ஆண்டுகள் வரையிலான விவரங்களை சேமித்து வைத்துக்கொள்ள முடியும்.

இதற்கிடையே தற்போது பயன்பாட்டில் இருந்து வரும் ஆர்.சி. புக் மற்றும் ஓட்டுநர் உரிமம் அக்டோபர் 1ம் தேதி முதல் செல்லுமா..? அல்லது புதுப்பிக்க வேண்டுமா..? என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleபள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை! நிலையில் தடுமாறும் தமிழக அரசு!
Next articleகோயம்பேடு மார்க்கெட் இன்று திறக்க போகிறதா? மகிழ்ச்சியில் வியாபாரிகள்!