பான் கார்டுடன் ஆதார் கார்டு இணைப்பு கால அவகாசம் நீட்டிப்பு – மத்திய அரசு அறிவிப்பு !!

Photo of author

By Vijay

பான் கார்டுடன் ஆதார் கார்டு இணைப்பு கால அவகாசம் நீட்டிப்பு – மத்திய அரசு அறிவிப்பு !!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் தனி அடையாளமாக மத்திய அரசால் வழங்கப்பட்டது தான் ஆதார் அட்டை, இந்த அடையாள அட்டை என்பது இந்திய நாட்டில் வசிப்பவர் என்பதற்கும், மேலும் முகவரி சான்றாகவும், அரசின் பல்வேறு திட்டங்களுக்கு அடையாளமாக பயன்படுத்தவும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

இந்த அடையாள அட்டையானது கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு வழங்கப்பட்ட காரணத்தினால், மீண்டும் 2020ம் ஆண்டு அதில் பொதுமக்கள் தங்களுக்கான மாற்றங்களை செய்து கொள்ள மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால் அந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மாற்றம் செய்ய முடியாமல் இருந்த காரணத்தால் , இந்த ஆண்டு மார்ச் 31 வரை அவகாசம் வழங்கப்பட்டு வந்த நிலையில்.

பொது மக்களின் சிரமத்தை புரிந்து கொண்டு அவர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் தற்போது மேலும் மூன்று மாத காலம் அவகாசம் வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது, இதனை தொடர்ந்து ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் வருகின்ற ஜூன் 30ம் தேதி வரை காலக்கெடு நீடித்து உள்ளது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் எனவும், பொதுமக்கள் சிரமம் இன்றி தங்களது ஆதார் அட்டை பான் கார்டுடன் இணைப்பதற்கு இந்த கால அவகாசத்தை பயன்படுத்தி கொள்ளுமாறு மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.