முதல்வரை சந்திக்கும் உள்துறை அமைச்சர் பலமாகிறதா கூட்டணி! பீதியில் திமுக!

Photo of author

By Sakthi

மத்திய உள்துறை அமைச்சரும் முன்னாள் பாஜகவின் தேசிய தலைவருமான அமித்ஷா அவர்கள் இரண்டு நாள் பயணமாக இன்றைய தினம் சென்னை வருகின்றார். தமிழ்நாட்டில் அந்தக் கட்சியின் வளர்ச்சி அதோடு திமுக வீழ்ச்சி சம்பந்தமான திட்டங்களை முடிவு செய்வதற்காக யோசனையில் இருக்கின்றார் அமித்ஷா இதன் காரணமாக தமிழ்நாட்டில் அரசியல் களம் பரபரப்பாக இருக்கின்றது.

மெட்ரோ ரயில் உள்பட 67 ஆயிரத்து 378 கோடி ரூபாய் செலவிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் மத்திய உள்துறை அமைச்சர் சட்டசபை தேர்தல் கூட்டணி சம்பந்தமாக முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்.

இன்றைய தினம் காலை பத்து முப்பது மணி அளவில் டெல்லியிலிருந்து கிளம்பும் அமித்ஷா, பிற்பகல் 1 45 மணி அளவில் சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்குகிறார். அங்கே அவருக்கு தமிழக அரசு சார்பிலும், பாஜக சார்பாகவும், சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அங்கிருந்து நேராக ராஜா அண்ணாமலைபுரம் லீலா பேலஸ் செல்லும் அமித்ஷா,அங்கே சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார். அதன் பின்பு சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடக்கவிருக்கும் அரசு விழாவில் பங்கு பெறுகின்றார்.

தமிழக அரசின் சார்பாக ரூபாய் 380 கோடி ரூபாயில் உருவாக்கப்பட்டிருக்கின்றன தேர்வாய் கண்டிகை புதிய நீர்தேக்க திட்டத்தினை மக்கள் பயன்பாட்டிற்காக அவர் அர்ப்பணிக்கிறார். அதோடு ரூபாய் 61 ஆயிரத்து 843 கோடி ரூபாயில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள், மற்றும் ஆயிரத்து 620 கோடி ரூபாய் செலவில் உயர்மட்ட சாலை திட்டம், கரூர் மாவட்டம் நன்சைபுகலூரில் ரூபாய் 406 கோடி செலவில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை திட்டம், ரூபாய் 350 கோடி செலவில் சென்னை வர்த்தக மையத்தை விரிவுபடுத்தும் திட்டம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சார்பாக வல்லூரில் ரூபாய் 900 கோடி செலவில் பெட்ரோலியம் முனையம், போன்ற பல திட்டங்களுக்கு காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டி உரையாற்றுகிறார் உள்துறை அமைச்சர்.

இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் முடித்துக்கொண்டு லீலா பேலஸ் செல்லும் அமித்ஷா, இரவு ஏழு முப்பது மணி அளவில் பாஜகவின் மாநில நிர்வாகிகள், மற்றும் மாவட்ட தலைவர்களுடன், சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள், மற்றும் கூட்டணி உறவு போன்ற பல விஷயங்கள் சம்பந்தமாக ஆலோசனை செய்கின்றார். இதனைத் தொடர்ந்து இரவு எட்டு முப்பது மணி அளவில் பாஜக மாநில மைய குழு கூட்டத்திலும் பங்கு பெறுகின்றார். தமிழகத்தில் ஆளும் தரப்பினர் கூட்டணியை தொடர்வதா? அல்லது திமுக, அதிமுகவிற்கு மாற்றாக மூன்றாவது அணியை அமைக்கலாமா என்பது தொடர்பான விஷயத்தையும், தமிழகத்தில் அந்தக் கட்சியின் வளர்ச்சி சம்பந்தமாகவும், விவாதிக்க இருக்கின்றார்.

பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் முடிவுற்றதும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், உள்ளிட்டோர் அமித்ஷாவை சந்திக்க இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி யாத்திரையில் இரண்டு கட்சிகள் இடையில்ஏற்பட்டு இருக்கின்ற மோதல் ஆகியவை சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக அந்த கட்சியினர் தெரிவிக்கின்றார்கள். இன்று இரவு சென்னையிலேயே தங்கும் உள்துறை அமைச்சர், நாளை காலை சுமார் 10 மணி அளவில் டெல்லி புறப்பட்டு செல்கின்றார்.