யுனைடெட் கோப்பை டென்னிஸ் தொடர்! அமெரிக்கா மற்றும் கனடா நாடுகள் வெற்றி!
ஆஸ்திரேலியா நாட்டில் நடைபெற்ற யுனைடெட் கோப்பை டென்னிஸ் தொடரில் அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகள் வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியா நாட்டில் நேற்று அதாவது கடந்த 2023ம் வருடம் டிசம்பர் 31ம் தேதி யுனைடெட் கோப்பை டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இதில் அமெரிக்கா, பிரிட்டன், சிலி, கனடா ஆகிய. நாடுகளை சேர்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். ஒற்றையர், கலப்பு இரட்டையர் என்ற பிரிவில் போட்டிகள் நடைபெற்றது.
முதலில் மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவை சேர்ந்த ஜெஸிகா பெகுலா மற்றும் பிரிட்டனை சேர்ந்த கேட்டி போல்டர் ஆகியோர் மோதினர். இதில் பிரிட்டனை சேர்ந்த வீராங்கனை கேட்டி போல்டர் 5-7, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் ‘டை’ அடிப்படையில் அமெரிக்காவை சேர்ந்த வீராங்கனை ஜெஸிகா பெகுலாவை வீழ்த்தினார்.
அதே போல ஆடவர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவை சேர்ந்த வீரர் டெய்லர் பிரிட்ஸ் 7-6(7/5), 6-4 என்ற செட் கணக்கில் பிரிட்டன் நாட்டை சேர்ந்த வீரர் கேமரூன் நோரியை வீழ்த்தினார். இதனால் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் தலா ஒரு பிரிவில் வென்று சமனில் இருந்தது. இதையடுத்து வெற்றியாளரை நிர்ணயிக்கும் கலப்பு இரட்டையர் போட்டி நடைபெற்றது.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் கலப்பு இரட்டையர் பிரிவில் அமெரிக்காவை சேர்ந்த டெய்லர் பிரிட்ஸ் மற்றும் ஜெஸிகா பெகுலா இருவரும் சிறப்பாக விளையாடினர். தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடி வந்த அமெரிக்காவை சேர்ந்த ஜெஸிகா பெகுலா மற்றும் டெய்லர் பிரிட்ஸ் இணை பிரிட்டன் நாட்டை சேர்ந்த கேமரூன் நோரி, கேட்டி போல்டர் இணையை 1-6, 7-6(7-4), 10-7 என்ற செட் கணக்கில் டை முறையில் வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
அதே போல கனடா மற்றும் சிலி ஆகிய நாடுகளை சேர்ந்த வீரர் மற்றும் வீராங்கனைகள் விளையாடினர். இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் கனடா நாட்டை சேர்ந்த வீராங்கனை லெய்லா பெர்ணான்டஸ் அவர்கள் 6-2, 6-3 என்ற செட் கணக்கில் சிலி நாட்டை சேர்ந்த வீராங்கனை டேனியேலா சிகெல் அவர்களை வீழ்த்தினார்.
அதே போல ஆடவர் ஒற்றையர் பிரிவில் சிலி நாட்டை சேர்ந்த வீரர் நிகோலா ஜேரி அவர்கள் 7-5, 6-4 என்ற செட் கணக்கில் கனடாவை சேர்ந்த ஸ்டீவன் டியெஸை வீழ்த்தினார். இதையடுத்து வெற்றியை தீர்மானிக்கும் கலப்பு இரட்டையர் பிரிவில் கனடா நாட்டை சேர்ந்த வீரர் ஸ்டீவன் டியெஸ் மற்றும் வீராங்கனை லெய்லா பெர்ணாடன்டஸ் இருவரும் 7-5, 4-6, 10-8 என்ற செட் கணக்கில் சிலி நாட்டை சேர்ந்த வீரர் மார்செலோ தாமஸ் மற்றும் வீராங்கனை டேனியேலா சிகெல் ஆகிய இருவரையும் வீழ்த்தினர்.