பெண்கள் தங்கள் சருமத்தில் முடி இருப்பதை விரும்புவதில்லை.சருமத்தில் வளரும் தேவையற்ற முடிகளை அகற்ற இந்த குறிப்புகள் உதவும்.
தேவையான பொருட்கள்:-
1)எலுமிச்சம் பழம் – ஒன்று
2)தேன் – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
ஸ்டெப் 01:
முதலில் ஒரு கனிந்த எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாறை ஒரு கிண்ணத்திற்கு பிழிந்து கொள்ளுங்கள்.
ஸ்டெப் 02:
பின்னர் அந்த எலுமிச்சை சாறில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து நன்றாக குழைத்து சருமத்தில் தடவுங்கள்.
ஸ்டெப் 03:
இந்த கலவை முகத்தில் நன்கு காய்ந்து வரும் வரை உலரவிட்டு பிறகு குளிர்ந்த நீர் கொண்டு முகத்தை கழுவ வேண்டும்.
ஸ்டெப் 04:
இந்த கலவையை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் சருமத்தில் வளர்ந்துள்ள தேவையற்ற முடிகள் நீங்கிவிடும்.
தேவையான பொருட்கள்:-
1)பால் – இரண்டு தேக்கரண்டி
2)மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
ஸ்டெப் 01:
முதலில் இரண்டு தேக்கரண்டி அளவிற்கு காய்ச்சாத பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.பாக்கெட் பால் அல்லாமல் பசும் பாலாக இருந்தால் இன்னும் சிறப்பு.
ஸ்டெப் 02:
அடுத்து அதில் கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து நன்கு குழைத்து முகத்தில் தடவி வந்தால் தேவையற்ற முடிகள் அனைத்தும் நீங்கிவிடும்.
தேவையான பொருட்கள்:-
1)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி
2)பால் – இரண்டு தேக்கரண்டி
3)உப்பு – சிறிதளவு
4)மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
ஸ்டெப் 01:
முதலில் ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாறை ஒரு கிண்ணத்திற்கு ஊற்றிக் கொள்ளுங்கள்.
ஸ்டெப் 02:
பிறகு அதில் மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளுங்கள்.
ஸ்டெப் 03:
அடுத்து இரண்டு தேக்கரண்டி பசும் பால் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து சருமத்தில் அப்ளை செய்து நன்கு உலரவிட்டு க்ளீன் செய்தால் தேவையற்ற முடிகள் எளிதில் வந்துவிடும்.
தேவையான பொருட்கள்:-
1)முட்டையின் வெள்ளைக்கரு – ஒன்று
2)சர்க்கரை – ஒரு தேக்கரண்டி
3)சோள மாவு – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
ஸ்டெப் 01:
முதலில் ஒரு முட்டையை உடைத்து அதன் வெள்ளை கருவை ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ளுங்கள்.
ஸ்டெப் 02:
அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி வெள்ளை சர்க்கரை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளுங்கள்.
ஸ்டெப் 03:
அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி சோள மாவு சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு கலந்து கொள்ளுங்கள்.பிறகு இதை முகத்திற்கு அப்ளை செய்து நன்கு உலர வைத்து தண்ணீர் கொண்டு சுத்தம் செய்தால் சருமத்தில் உள்ள தேவையற்ற முடிகள் அகலும்.