இங்கு ஆதார் மற்றும் பயோமெட்ரிக் வருகை பதிவை புதுப்பிக்க வேண்டும்! என்.எம் சி வெளியிட்ட தகவல்!
ஆதார் என்பது தற்போது முக்கிய ஆவணமாக மாறி வருகின்றது. அந்த வகையில் குடும்ப அட்டை, வங்கி கணக்கு, மின் இணைப்பு, பான் கார்டு போன்ற முக்கிய ஆவணங்களுடன் இந்த ஆதார் அட்டை எண் இணைப்பது கட்டாயமாகப்பட்டது. மேலும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஆதார் அட்டையை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும்.
அதனால் அரசின் இணையதளத்தில் சென்று இலவசமாக ஆதாரை புதுப்பித்துக் கொள்ளலாம் என அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் மருத்துவ கல்லூரிகளில் ஊழியர்கள் பணியிட மாறுதலாகி செல்லும்பொழுது அவர்களது ஆதார் உடன் இணைந்த வருகை பதிவு தகவல்களை புதுப்பிக்க வேண்டும். அவ்வாறு புதுப்பிக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து என் எம் சி இயக்குனர் பங்கஜ் அகர்வால் கூறுகையில் மருத்துவ கல்லூரிகளில் ஆதார் உடன் இணைக்கப்பட்ட பயோமெட்ரிக் வருகை பதிவில் அனைத்து பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் குறித்த விவரங்களை பதிவேற்ற வேண்டும். மேலும் கல்லூரியில் தேவையான இடங்களில் பயோமெட்ரிக் வருகை பதிவு சாதனைகளை பொருத்த வேண்டும் எனவும் முன்னதாகவே என் எம் எஸ் சி தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது அதற்கான நடவடிக்கைகள் மருத்துவ கல்லூரிகளின் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மாறுதலாகி செல்லும் மருத்துவ கல்லூரி ஊழியர்களின் விவரங்களை சம்பந்தப்பட்ட கல்லூரிகள் புதுப்பிப்பது மிக அவசியம். ஆனால் சில கல்லூரிகள் அந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை என புகார்கள் எழுந்து வருகின்றது.
இந்நிலையில் என் எம் சி வழிகாட்டுதலின்படி ஆதார் பயோமெட்ரிக் வருகை பதிவு விவரங்களை புதுப்பிக்க தவறும் மருத்துவ கல்லூரிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இளநிலை மற்றும் முதுநிலை இடங்களை அதிகரிப்பதற்கு அனுமதியும் மறுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.