’தளபதி 65’ உறுதியான இரு விஷயங்கள்:புது ரூட்டில் புகுந்த விஜய்!

Photo of author

By Parthipan K

’தளபதி 65’ உறுதியான இரு விஷயங்கள்:புது ரூட்டில் புகுந்த விஜய்!

விஜய் அடுத்ததாக நடிக்க இருக்கும் படத்தின் இயக்குனர் மற்றும் முக்கியக் கதாநாயகி ஆகியோர் இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய்யின் தன் 64 ஆவது படமான மாஸ்டர் படத்தின் படப்பிடிப்புகளில் இப்போது கவனம் செலுத்தி வருகிறார். இந்தப் படம் கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வர இருக்கிறது.  சமீபத்திய ரெய்டு நடவடிக்கைகளால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இதையடுத்து விஜய்யின் 65 ஆவது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. அந்த படத்தின் இயக்குனர் என்பது பற்றி இதுவரை அறிவிக்காத நிலையில் இப்போது அதுபற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

அந்த படத்தை கனா படத்தின் இயக்குனரும் சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பருமான அருண்ராஜா காமராஜா இயக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இவரின் முதல் படமானக் கணா வெற்றி பெற்றதை அடுத்து அவர் விஜய்யின் குட் லிஸ்ட்டில் இருந்திருக்கிறார். இந்நிலையில் பல இயக்குனர்கள் விஜய்க்காக அடுத்த படத்தின் கதை சொல்லியுள்ள நிலையில் இவரின் கதை விஜய் மற்றும் சன் பிக்சர்ஸ் தரப்புக்குப் பிடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் இவரையே தனது அடுத்தப் படத்தின் இயக்குனராக விஜய் டிக் அடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் விஜய்யின் தங்கையாக நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தமாகியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. முன்னதாக தளபதி 65 –ன் இயக்குனர் பட்டியலில் பேரரசு மற்றும் பாண்டிராஜ் அகிய முன்னணி இயக்குனர்களின் பெயர்கள் பரிசீலனையில் இருந்த நிலையில் ஒரே ஒரு படம் இயக்கிய அருண்ராஜாவுக்கு வாய்ப்புக் கிடைத்தது எப்படி என கோலிவுட்டே ஆச்சர்யமடைந்துள்ளது. சமீபகாலமாக விஜய் தனது வழக்கமான ரூட்டை மாற்றி அட்லி, லோகேஷ் போன்ற இளம் இயக்குனர்களின் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.