12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெறுமா? வெளியான அதிரடி அறிவிப்பு

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெறுமா? வெளியான அதிரடி அறிவிப்பு

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு பொதுமக்களின் வாழ்வாதாரத்தையும்,மாணவர்களின் கல்வியையும் கடுமையாக பாதித்துள்ளது.இந்நிலையில் அடுத்தடுத்து ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் சகஜ நிலைக்கு திரும்பினர். இதன் காரணமாக கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.
இவ்வாறு கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு ஆரம்பித்துள்ளதால் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்படுமோ என்று பலரும் சந்தேகத்துடன் உள்ளனர். இந்நிலையில் வரும் மே மாதம் தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடக்கவுள்ள பொதுத்தேர்வு நடைபெற வாய்ப்புள்ளதா என்ற சந்தேகமும் ஏற்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பானது தொடர்ந்து அதிகரித்து வருவதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தள்ளிப்போகலாம் என்றே எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் இன்று இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது இதுகுறித்தும் விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
அந்த வகையில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் மொழிப்பாட தேர்வு மட்டும் மே 3 ஆம் தேதிக்குப் பதில் மே 31 ஆம் தேதி நடைபெறும் என தேர்வுத்துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
திட்டமிட்டபடி 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும் இந்த தேர்வுகள் சமூக இடைவெளியுடனும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடனும் நடத்தப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment