UPSC சிவில் சர்வீஸ் 2022 தேர்வு முடிவுகள் வெளியீடு!!

Photo of author

By Savitha

UPSC சிவில் சர்வீஸ் 2022 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.அதன்படி மொத்தம் 933 தேர்வர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

933 தேர்ச்சி பெற்ற தேர்வர்களுக்கு ஐஏஎஸ் ஐபிஎஸ் ஐஎஃப்எஸ் உள்ளிட்ட பல்வேறு பணி நிலைகளில் அவர்கள் பெற்ற தரவரிசைக்கு ஏற்ப  பணி நியமனம் வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதன்மை தேர்வு நடைபெற்ற நிலையில் இவ்வாறு இந்த ஆண்டு ஜேன்வரி முதல் மே வரை நேர்முகத் தேர்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இஷிதா கிஷோர் என்ற பெண் அகில இந்திய அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.இவை தவிர முதல் நான்கு இடங்களையும் பெண்களே படித்துள்ளனர்.

கரீமா லோஹியா,உமா ஹராத்தி,ஸ்மிருதி மிஷ்ரா உள்ளிட்ட பெண்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.