விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் நகராட்சியில் 21 வார்டுகள் இருக்கிறது தற்சமயம் நடந்துமுடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 145 பேர் இந்த தேர்தலில் போட்டியிட்டார்கள். ஒட்டு மொத்த ஓட்டுகள் ௨௪௦௮௩ என தெரிவிக்கப்படுகிறது. ஆனாலும் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை 23000 என தெரிவிக்கப்படுகிறது.
இன்று காலை 8 மணி அளவில் கோட்டக்குப்பம் பேரிடர் மேலாண்மை இயக்குனர் அலுவலகத்தில் வாக்கு எண்ணும் பணி ஆரம்பமானது. முதல் கட்டமாக 1 முதல் 3 வார்டுகளுக்கு வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் 3 வார்டுகளிலும் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
1வது வார்டில் திமுகவைச் சார்ந்த ஜெயமூர்த்தியும், 2வது வார்டில் கலா மணிகண்டன் என்ற திமுக வேட்பாளரும், 3வது வார்டில் திமுகவை சேர்ந்த ஆதிலட்சுமி பாஸ்கர் என்ற வேட்பாளரும், வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அறிவித்திருக்கிறார்.
தேர்தல் அலுவரின் இந்த அறிவிப்பிற்கு பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள் வாக்கு எண்ணிக்கை முறையாக நடைபெறவில்லை என்று தெரிவித்து தர்ணாவில் ஈடுபட்டதாக தெரிகிறது.
தகவலறிந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் அருண் தலைமையிலான காவல்துறையினர் விரைந்து சென்று அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்கள் என சொல்லப்படுகிறது.