நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது.
21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு நடந்த இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணி அளவில் ஆரம்பமானது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வந்தனர்.
அதன்படி தமிழ்நாடு முழுவதும் 768 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. சென்னையில் 200 வார்டுகளில் பதிவான வாக்குகள் 15 பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கின்ற மையங்களில் எண்ணப்பட்டு வருகின்றன.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வந்த சூழ்நிலையில், மாநகராட்சி தேர்தலில் திமுக 24 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. அதிமுக 2 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. 1 இடத்தில் சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற்றிருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது.