நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! இன்று வெளியாகும் வாக்காளர் பட்டியல்!

Photo of author

By Sakthi

நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் மாவட்ட தேர்தல் அலுவலர்கள், மாவட்ட ஆட்சியாளர்கள், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர், உள்ளிட்டோர் இன்று வெளியிடப்பட இருக்கிறது. இது குறித்தும், தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாகவும், மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் உடன் ஆலோசனை செய்தார் என்று சொல்லப்படுகிறது.

அங்கீகாரம் வழங்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வாக்காளர் பட்டியல் வழங்குதல், காலி பணியிடங்கள் ஆக இருக்கின்ற தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உள்ளிட்ட பதவிகளை விரைவாக நிரப்புதல், தேர்தலை அமைதியான முறையில் நடத்துவது, போன்ற பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

இன்று வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் நிலையில், இது தொடர்பான அறிவிப்பை ஒரு சில நாட்களுக்கு முன்னரே தேர்தல் ஆணையம் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது, இதில் மாநிலத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்களும் மற்றும் முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்றார்கள்.