மு.க ஸ்டாலினுக்கு அவசர கடிதம்! விஜய் சேதுபதி,வெற்றிமாறன் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு!

Photo of author

By Rupa

மு.க ஸ்டாலினுக்கு அவசர கடிதம்! விஜய் சேதுபதி,வெற்றிமாறன் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு!

சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து 159 இடங்களில் வெற்றி பெற்றது.இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று பதவி பிரமாணம் செய்தார்.அதனையடுத்து ஸ்டாலினின் 33 அமைச்சர்களும் பதவி பிரமாணம் செய்தனர்.அவர் பதவி பிரமாணம் செய்த உடன் அண்ணா மற்றும் முன்னால் முதல்வர் கருணாநிதி அவர்களின் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இன்று மதியம் முதல்,அவரது முதல்வர் வேலையை தொடங்க உள்ளார்.முதல் கையெழுத்தாக அரசி வாங்கும் ரேஷன் தாரர்களுக்கு ரூ.4000 நிவாரண நிதியா தர உள்ளார்.அதனையடுத்து நகர பெண்கள் நகர பேருந்துகளில் இலவசமாக செல்வதற்கு கையெழுத்திட உள்ளார்.இதனிடையே கொரோனா தொற்று தற்பொழுது அதிகளவு பரவி வருகிறது.இதனால் இந்தியா முழுவதிலும் ஆக்சிஜன் பற்றாக்குறையும் தடுப்பூசி பற்றக்குறையும் ஏற்பட்டுள்ளது.ஆக்சிஜன் தேவையை அதிகரிக்க ஸ்டெர்லைட் ஆலை நான்கு மாதங்களுக்கு திறக்கப்படுவதாக முன்னால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.

இதனால் நடிகர் விஜய்சேதுபதி,இயக்குனர் வெற்றிமாறன், பாடகர் டி.கிருஷ்ணா,ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தேவசகாயம் இதுபோன்று 67 பேர் கையெழுத்திட்டு அவசர கடிதம் ஒன்று மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பப்பட்டது.இந்த கடிதமானது திமுக தலைவர் பதிவேற்கும் முன்னதாகவே அவருக்கு அனுப்பட்டது.

இந்த கடிதத்தில் பல கோரிக்கைகள் திமுக விற்கு எதிரானதாகவும் உள்ளதால் திமுக தலைவர் ஸ்டாலின் எவ்விதத்தில் நடவடிக்கை எடுப்பார் என அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.அவ்வாறு அந்த கடிதத்தில் கூறியதாவது, முதலாவதாகவே தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையம் திறக்கப்படக்கூடாது,அந்த நிறுவனத்தின் சுற்றுச்சூழல் பாதிப்பு குற்றங்களுக்காக அந்த நிறுவனத்தின் இயக்குனர் மீது வழக்கு தொடர வேண்டும்.

சேலத்தின் எட்டு வலி சாலை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.அதனால் பல வகைகளில் இயற்கை வலம் நாசமாகிறது.கூடங்குளத்தில் அமைத்துள்ள கூடுதலான 4வது அணு உலையை நிறுத்த வேண்டும்.காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கம்,கன்னியாகுமரி சர்வதேச கொள்கலன் முனையம்,சித்தூர்-தச்சூர் 6 வலி சாலை திட்டம் ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும்.மரபணு மாற்ற விதைகளை அனுமதிக்க வேண்டாம்.நிலத்தடி நீரின் வணிகரீதியான பயன்பாட்டை கட்டுப்படுத்த கடுமையான விதிகளை உள்ளடக்கிய விரிவான நிலத்தடி நீர் சட்டம் கொண்டு வர வேண்டும்.

டெல்டாவில் ஹைட்ரோகார்பன் சுரண்டலுக்கு எதிரான உறுதிமொழியை வலிமைப்படுத்துதல், அனைத்து டெல்டா மாவட்டங்கள் மற்றும் அனைத்து ஹைட்ரோகார்பன் நடவடிக்கைகளையும் உள்ளடக்குதல், சுத்திகரிப்பு மற்றும் செயலாக்கம் உள்ளிட்டவையும் இதில் அடங்கும்.

புவி வெப்பமடைதலுக்கு காரணமாக இருக்கும் மற்றும் உள்ளூர் பகுதிகளின் காற்று, நீர் மற்றும் நிலத்தை மாசுபடுத்தும் புதிய நிலக்கரி, அனல் மின் திட்டங்களை கைவிட்டு மாநிலத்தின் ஆற்றல் தேவைகளுக்கு பரவலாக்கப்பட்ட சிறிய அளவிலான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்களை பின் தொடர வேண்டும்.உள்கட்டமைப்பு மற்றும் தொழில்துறை திட்டங்கள் தொடர்பாக பொது ஆலோசனை மற்றும் சுற்றுச்சூழல் முடிவெடுப்பதில் பங்கேற்பதை வலுப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

இந்த கடிதத்தில் இவர்கள் கூறிய பல கோரிக்கைகள் திமுக-விற்கு எதிரானவையே.அதில் முதலாக ஸ்டெர்லைட் ஆலைக்கு திறப்புக்கு தடை விதிக்க கோரியது.தற்போது இந்தியா முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது.அதனால் மக்களுக்கு தட்டுப்பாடு இன்றி ஆக்சிஜன் கிடைக்க ஸ்டெர்லைட் ஆலையம் நிறுவனர் ஆக்சிஜனை உற்பத்தி மேற்கொள்ள அனுமதிக்குமாறு உச்சநீதிமன்றத்தில் வழக்கு மனு தொடுத்தார்.

இந்த மனுவில் விசாரணையில் உச்சநீதிமன்றம்,தமிழக அரசு பரிசீலிக்கும் படி ஆணையிட்டது.அதனையடுத்து முன்னால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.இதில் மகளிரணி செயலாளர் கனிமொழி கலந்துக்கொண்டார்.அப்போது அதிமுக தலைவர் நான்கு மதங்களுக்கு ஸ்டெர்லைட் ஆலயம் திறந்து ஆக்சிஜன் உற்பத்தியை மேற்கொள்ளுமாறு கூறினார்.

தமிழக அரசின் முடிவின் படி உச்சநீதிமன்றம் நான்கு மாதங்களுக்கு ஆக்சிஜன் தயாரிக்க ஸ்டெர்லைட் ஆலையை திறக்குமாறு ஆணை பிரபித்தது.ஆனால் தற்போது நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் கோரிக்கையின் படி ஸ்டெர்லைட் ஆலையம்  திறக்கபடா விட்டால் அதிக அளவு மக்கள் ஆக்சிஜன் இல்லாமல் உயிர்களை இழக்கும் நிலை ஏற்படும்.

அதுமட்டுமின்றி அவர்களின் இரண்டாவது கோரிக்கையை பலரும் எதிர்த்து வருகின்றனர்.கூடங்குளத்தில் ரஷ்யாவின் உதவியுடன் நான்காவது அணு உலை நிறுவ உள்ளனர்.இதை நிறுவுவதால் சுற்றுசூழல் மாசுபடும் அதனால் அதை முற்றிலும் தடுக்குமாறு அக்கடிதத்தில் கூறியுள்ளனர்.ஆனால் அணு உலை நிறுவுவதை தடுத்தால் தமிழகம் முழுவதும் மின்சாரம் இல்லாமல் பெருமளவு பாதிப்பிற்குள்ளாகும்.ஓர் ஆண்டிற்கு மட்டும் 16 ஆயிரம் மின் வாட்டாக தேவைடுகிறது.நாளடைவில் இது 18 என மாறுபடும்.அதனால் 4- வது அணு உலை நிறுவுவதை தடுத்தால் தமிழகம் அதிக அளவு பாதித்து விடும்.இன்னும் ஓரிரு ஆண்டுகளில் பயன்பாட்டிற்கு வர இருக்கும் 3 வது அணு உலை மற்றும் தற்போது இயக்கத்திலிருக்கும் அணு உலை மட்டும் சுற்றுச்சசூழலுக்கு பதிப்பு ஏற்படுத்தாத என பலர் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.