இந்தியாவுக்கு சுற்றுலா செல்ல வேண்டாம்: அமெரிக்கா, இங்கிலாந்து எச்சரிக்கை

0
138

இந்தியாவுக்கு சுற்றுலா செல்ல வேண்டாம்: அமெரிக்கா, இங்கிலாந்து எச்சரிக்கை

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் உள்பட பல மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வருவதை அடுத்து இந்தியாவுக்கு சுற்றுலா செல்வதை செல்ல வேண்டாம் என அமெரிக்கா இங்கிலாந்து நாடுகள் தங்கள் நாட்டின் சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா சமீபத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுவதும் பல்வேறு கட்சிகளும் பொதுமக்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக அசாம் உள்பட வட கிழக்கு மாநிலங்களில் போராட்டம் கலவரமாக மாறி பதட்டமான சூழ்நிலை உள்ளது

இந்த நிலையில் இந்தியாவிற்கு குறிப்பாக வடகிழக்கு மாநில பகுதிகளுக்கு சுற்றுலா செல்ல வேண்டாம் என அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகள் தங்கள் நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. மேலும் பிரான்ஸ், இஸ்ரேல் போன்ற நாடுகளும் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யும்போது கவனமாக இருக்க அறிவுறுத்தியுள்ளன. இந்த நிலையில் இந்தியாவின் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு ஐநா சபை அதிருப்தி தெரிவித்துள்ளதாகவும், மேலும் சில நாடுகள் இந்தியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன

Previous articleபொங்கலுக்கு சிறப்பு பஸ்களுக்கு முன்பதிவு எப்போது?
Next articleசிகிச்சைக்காக தமிழகம் வந்த பிரபாகரன் தாயாரை துரத்திவிட்ட திமுக காங் கூட்டணி! உதயநிதி செய்த நகைச்சுவை