தடைசெய்யப்பட்ட வான்வெளியில் பறந்த விமானம்! பீதியில் அமெரிக்க நாடாளுமன்றம்!

0
140

சில வருடங்களுக்கு முன்னர் பாகிஸ்தானை சார்ந்த அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லேடன் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் விமானத்தின் மூலமாக தாக்குதல் நடத்தினார்.

இதில் வெள்ளை மாளிகை சற்று சேதத்தை சந்தித்தது. இது அப்போதைய காலகட்டத்தில் கடுமையாக உலகளவில் எதிரொலித்தது.

ஆனால் அந்த நொடியில் இருந்து அமெரிக்கா ஒசாமா பின்லேடனை குறிவைக்க தொடங்கியது. உலக நாடுகளுக்கு தன்னுடைய ராணுவத்தை அனுப்பி பின்லேடன் எங்கே இருக்கிறார் என்று அமெரிக்க படை மிகத் தீவிரமாக தேடி வந்தது.

முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் அமெரிக்க அதிபராக இருந்தபோது ஆரம்பிக்கப்பட்ட இந்த தேடல் பராக் ஒபாமா அமெரிக்காவின் அதிபராக பதவியேற்ற பின்னரும் தொடர்ந்தது.

இந்த நிலையில், ஒரு வழியாக அமெரிக்க இராணுவத்தை சேர்ந்தவர்கள் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் ஒசாமா பின்லேடன் தன்னுடைய சொந்த நாடான பாகிஸ்தானில் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் தன்னுடைய சொந்த நாட்டிலேயே அமெரிக்கப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதன்பிறகு அமெரிக்காவின் வெள்ளை மாளிகை மற்றும் நாடாளுமன்றம் உள்ளிட்ட பகுதிகளில் அமெரிக்க ராணுவம் கூடுதல் கவனம் செலுத்தத் துவங்கியது.

இந்த சூழ்நிலையில், அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் அமைந்திருக்கின்ற நாடாளுமன்றத்தில் கடந்த வருடம் ஜனவரி மாதம் 6ஆம் தேதி அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்களின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதிலிருந்து நாடாளுமன்ற பாதுகாப்பில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி மாலை 6 .30 மணியளவில் திடீரென்று பரபரப்பு உண்டானது.

. நாடாளுமன்ற பணியாளர்கள் எல்லோரும் கூண்டோடு அவசர, அவசரமாக, வெளியேற்றப்பட்டார்கள். இதற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

ஆனாலும் இரட்டை எஞ்சின் கொண்ட ஒரு விமானம் மேரிலாந்துவிலுள்ள ஆண்ட்ரூஸ் கூட்டு தளத்திலிருந்து புறப்பட்டு அது நாடாளுமன்றம் அருகே தடைசெய்யப்பட்டுள்ள வான் வெளியில் சுற்றிக் கொண்டிருந்தது.

அது பாதுகாப்பு படை விமானம் என்று தெரியாமல் தாக்குதல் நடத்த வந்த விமானமாக இருக்கலாம் என்ற அச்சுறுத்தலால் இந்த வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதன்பிறகு தெரியவந்தது.

அந்த விமானம் 6:50க்கு மீண்டும் ஆண்ட்ரூஸில் தரையிறங்கியது அந்த விமானத்தில் அமெரிக்க இராணுவத்தின் பாராசூட் பிரிவினர்தான் பயிற்சிக்காக இயக்கி வருகிறார்கள் என்பதும், தெரியவந்தது. ஆனால் விமானம் புறப்பட்டத்தை விமானி தெரிவிக்காமல் இருந்திருக்கலாம். அதன் காரணமாக தான் குழப்பம் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கிறார்கள்.

இந்த சம்பவத்திற்கு நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி கடுமையான கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார்.

மேலும் மத்திய விமானப் படை நிர்வாகத்தை அவர் சாடியுள்ளார் இதுகுறித்து கேப்பிட்டல் காவல்துறையினருக்கும் முன்கூட்டியே தகவல் தெரிவிக்க தவறியது மூர்க்கத்தனமானது, மன்னிக்க முடியாதது என்று மிகவும் ஆவேசமாக தெரிவித்திருக்கிறார்.

அதன்பிறகு இரவு 8.30 மணியளவில் நாடாளுமன்ற வளாகம் திறக்கப்பட்டது. இந்த சம்பவம் வாஷிங்டனில் பெரும் பரபரப்பை உண்டாக்கி விட்டது.

Previous articleவரும் 30 ஆம் தேதி இந்த இரு முக்கிய மாவட்டங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்!
Next articleதமிழகத்தில் ஏன் இந்த திடீர் மின்தடை? விளக்கமளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி!