இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதித்த அமெரிக்கா!! ரஷ்யா உக்ரைன் போர் தான் காரணமா!!

Photo of author

By Gayathri

இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதித்த அமெரிக்கா!! ரஷ்யா உக்ரைன் போர் தான் காரணமா!!

Gayathri

US has imposed economic sanctions on Indian companies!! Russia is the cause of the war in Ukraine!!

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவிற்கு ஆதரவாக இந்தியா செயல்பட்டதென்று 400 க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்கள் மீது அமெரிக்கா உட்பட 10 க்கும் மேற்பட்ட நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளது.

120க்கும் மேற்பட்ட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது வெளியுறவுத்துறை தடைகளை விதித்துள்ள அதே நேரத்தில் கருவூலத்துறை 270க்கும் மேற்பட்ட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அசன்ட் ஏவியேஷன் இந்தியா பிரைவேட் லிமிட்டெட் என்ற நிறுவனம் மார்ச் 2023 முதல் மார்ச் 2024க்கு இடையில் ரஷ்யாவை தலமாக கொண்ட நிறுவனங்களுக்கு 700 ஏற்றுமதி தொகுப்புகள் அனுப்பியதாகவும், அதில் அமெரிக்க தயாரிப்பு விமான பாகங்கள் மற்றும் மைக்ரோ சிப்கள் உள்ளதாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. மேலும் இந்நிறுவனத்தின் இயக்குனர்களான விவேக் குமார் மிஸ்ரா, சூதர் குமார் ஆகியோருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று அமெரிக்க அரசு தனது அறிக்கையில் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா நிறுவனங்களுக்கு மட்டுமல்லாமல் சீனா, மலேசியா, தாய்லாந்து, துருக்கி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற பல நாடுகளின் நிறுவனங்களுக்கும் பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.