ரஷ்யாவிற்கு கடுமையான எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா!

Photo of author

By Sakthi

மாலியில் செயல்பட்டு வருகின்ற ரஷ்யாவை சேர்ந்த ராணுவ உபகரண தயாரிப்பு நிறுவனத்திற்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருக்கிறது மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் சென்ற வருடம் முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது, இதற்கிடையே ராணுவம் மற்றும் பிரிவினைவாதிகள் இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது இதில் ராணுவ உபகரணங்களை தயாரிக்கும் ரஷ்ய நிறுவனமான வாக்னர் குழுமம் மாலி இராணுவத்திற்கு அவற்றை விநியோகம் செய்து வருகிறது. இது ரஷ்ய அதிபர் புட்டின் அவர்களுக்கு நெருக்கமான அவரின் குடும்பம் என்று சொல்லப்படுவதால் இதன் தலையீட்டால் நாட்டின் நிலைமை மோசமாகி வருவதாலும், இதற்கு மேற்கத்திய நாடுகள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றன.

இந்த சூழ்நிலையில் ஆப்பிரிக்காவில் அரசு முறை பயணம் செய்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் அந்தோணி பிளின்கன் நேற்று முன்தினம் தெரிவித்ததாவது, மாலையில் இருக்கின்ற பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதத்தை நினைத்தால் கவலையாக இருக்கிறது. வெளிநாட்டைச் அறிந்தவர்களால் நாட்டில் நிலவி வரும் சூழல் மேலும் மோசமடையும் நிலை உண்டாகி இருக்கிறது பிரச்சனையை இன்னும் சிக்கலாக்கும் விதத்தில் அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள் இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் வாக்னர் குழுமத்தை பற்றி நான் தெரிவிக்கிறேன் சிரியா மற்றும் லிபியா போன்ற நாடுகளுக்கு ராணுவ உபகரணங்களை வினியோகம் செய்த இந்த குழுமம் தற்சமயம் மாலியிலும் தலைதூக்க ஆரம்பித்திருக்கிறது. அங்கே வாக்னர் குழுமம் செயல்பட்டு வருவது துரதிர்ஷ்டவசமாக இருக்கிறது என அவர் கூறியிருக்கிறார்.