அமெரிக்கா அமைச்சர்கள் இன்று இந்தியா வருகை – எதற்கு தெரியுமா?

Photo of author

By Parthipan K

அமெரிக்காவை சேர்ந்த இரண்டு அமைச்சர்களும் இந்தியாவை சேர்ந்த 2 அமைச்சர்களை சந்திக்க இன்று இந்தியாவிற்கு வருகின்றனர். அதாவது அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சரான மைக் போம்பியோவும், அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் மார்க் எஸ்பரும் இந்தியாவிற்கு வருகை தருகின்றனர்.

இந்திய மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு இடையில் உள்ள உறவை வலுப்படுத்தும் வகையில் அமெரிக்காவை சேர்ந்த இரண்டு அமைச்சர்களும் அதே பதவியை சேர்ந்த இரண்டு இந்திய அமைச்சர்களும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த சந்திப்பு மூன்றாவது சந்திப்பு ஆகும். மொத்தம் இந்த நான்கு அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

இந்தியாவை சேர்ந்த மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் மட்டும் அமெரிக்க அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் பேச்சுவார்த்தையின் போது இரு தரப்பிலும் ராணுவ தொழில்நுட்பம், தளவாடங்கள், சாட்டிலைட் வரைபடம் பகிர்வதற்கான ஒப்பந்தம் என பல்வேறு கருத்துக்கள் பேசப்படும்.

லடாக் எல்லையில் நீடித்து வரும் பிரச்சினைகள் குறித்தும் தென்சீனக் கடலில் சீனாவின் ஆதிக்கம் குறித்தும் விவாதிக்கப்படும் என்று நம்பப்படுகிறது. மேலும் அமெரிக்க அமைச்சர்கள் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து உரையாட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.