Breaking News

அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜோ பிடன் மீண்டும் போட்டி? அவரது மனைவி சொன்ன பரபரப்பு தகவல்!

அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜோ பிடன் மீண்டும் போட்டி? அவரது மனைவி சொன்ன பரபரப்பு தகவல்!

அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் ஜோ பிடன் போட்டியிடுவார் என்று அவரது மனைவி ஜில் பிடன் தெரிவித்துள்ளார். ஆப்ரிக்கா நாடுகளான நமீபியா, கென்யாவிற்கு சென்றுள்ள அமெரிக்க  அதிபர் ஜோ பிடனின் மனைவி ஜில் பிடன், அங்கு வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை  பார்வையிட்டார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர‍் ‘அமெரிக்காவில் 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில், தற்போதைய அதிபரான எனது கணவர் ஜோ பிடன் மீண்டும் போட்டியிட திட்டமிட்டுள்ளார் என தெரிவித்தார்.

இரண்டாவது முறையாக அடுத்த நான்காண்டு அவர் அதிபர் பதவியில் இருப்பார் எனவும் கூறியுள்ளார். ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளாராக ஜோ பிடன் மீண்டும் போட்டியிடுவது குறித்த அறிவிப்பு ஏதும் அதிகாரபூர்வமாக வெளியாகாத நிலையில், ஜில் பிடன் இவ்வாறு கூறியது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதேநேரம் குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபரான டொனால்டு டிரம்ப் போட்டியிடப்போகிறார். குடியரசுக் கட்சிக்குள்ளேயே டிரம்ப்புக்குப் போட்டியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹாலே, விவேக் ராமசாமி ஆகியோர் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளனர். இதனால் வரவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என்று தெரிகிறது.