ஈரான் அமெரிக்கா மீது கடும் குற்றச்சாட்டு

0
180

எங்களின் மீதான தடை மனிதநேயமற்றது என ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி அமெரிக்காவை சாடியுள்ளார்.

முன்னதாக அமெரிக்கா ஈரானின் அணு ஆயுத சோதனை ஒப்பந்தத்தில் இருந்து விலகியது.

வேறு எந்த காரணமும் இல்லாமல் முழுக்க சவுதி அரேபியாவின் அழுத்தம் காரணமாகவே அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளது என உலக சுகாதார அமைப்பின் 66-வது மாநாட்டில் கலந்துகொண்ட ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி கூறினார்.

பதவியேற்றதில் இருந்தே டொனால்ட் ட்ரம்ப் ஈரானின் அணு ஆயுத ஒப்பந்தம் முட்டாள்தனமானது என கடுமையாக விமர்சித்து வந்தார். இந்நிலையில், சமீபத்தில் சவுதியில் நடந்த எண்ணெய் கிணறு தாக்குதல் பின்னணியில் ஈரான் தான் இருக்கிறது எனவும் அமெரிக்கா நம்புகிறது.

இந்நிலையில், ஈரானுடனான ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்க விலகியது. ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த அண்டை நாடுகள் ஈரானுக்கே தங்களது ஆதரவினை தெரிவித்துள்ளது.

Previous article21 வன்னியர்கள் பலியானதற்கு திமுக தான் காரணம்-ராமதாஸ் குற்றச்சாட்டு
Next articleஇறுதிக்கட்டத்தை எட்டிய அயோத்தி விவகாரம்! தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைப்பு