அமெரிக்க அதிபர் தேர்தல்!! கமலா ஹாரிஸ் vs டொனால்ட் டிரம்ப்!!

Photo of author

By Vinoth

அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை (நவம்பர் 5) நடக்கவுள்ளது. இந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெறுபவர் 33 கோடிக்கும் அதிகமான மக்களைக் கொண்ட நாட்டை ஆளுப்போகிறார். இந்தத் தேர்தலில் ஒருசில மாகாணங்களில் உள்ள வாக்காளர்கள் வெல்லப்போவது யார் என்பதைத் தீர்மானிக்கப் போகிறார்கள். 50 மாகாணங்களில் 7 மாகாணங்களில் மட்டும் இந்த வருடம் கடுமையான போட்டி நிலவும் என எதிர்பகப்படுகிறது. அந்த 7 மாகாணம் இவைதான்

ரஸ்ட் பெல்ட் பகுதியான மிச்சிகன் ,

பென்சில்வேனியா,

விஸ்கான்சின்,

சன் பெல்ட் பகுதியான அரிசோனா,

ஜார்ஜியா,

நெவாடா,மற்றும்  வட கரோலினா.

அது போக மற்ற இடங்களில் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சிக்கு வெற்றிக்கு அதிகப்படியான வாய்ப்பு இருக்கிறது என கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. மொத்தம் எண்ணிக்கை வாக்கு 538 உள்ளது. மேலும் டிரம்ப் 2016-ல் வெற்றி பெற்றது டிரம்ப் 2016 இல் வென்றபோது இதுதான் நடந்தது. ஒருவேளை மொத்த எலெக்டோரல் வாக்குகள் 269-269 என சமநிலையை அடைந்தால், அமெரிக்க பிரதிநிதிகள் சபை வெற்றியாளரைத் தேர்ந்தெடுக்கும். ஒவ்வொரு மாநிலத்தின் பிரதிநிதிகளும் ஒரு வாக்கு செலுத்துவார்கள். இது முன்னாள் அதிபர் டிரம்புக்கு சாதகமாக இருக்கும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

மேலும் 7 மாகாணங்களை தவிர மற்ற மாகாணம் வாக்கு அளித்தால் தற்போது துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் 226, டிரம்பிற்க்கு 219 எலெக்டொரல் வாக்குகள் கிடைக்கும். மீதமுள்ள 93 வாக்குகளைப் பெறுவது யார் என்பதுதான் சுவாரஸ்யமான போட்டியாக இருக்கும்.