அமெரிக்க ராணுவத்தின் ஸ்டீவ் ஸ்மித்!

Photo of author

By Sakthi

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்க ராணுவம் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், காபூல் விமான நிலையத்தில் பணியில் இருந்த அமெரிக்க ராணுவ வீரரின் புகைப்படத்தை இணையதள வாசிகள் வைரலாக்கி வருகிறார்கள்.

அந்த புகைப்படத்தில் இருப்பவர் ஆஸ்திரேலிய அணியின் கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் முகச் சாயலுடன் இருப்பதை அவர்கள் கண்டிருக்கிறார்கள். இதனை தொடர்ந்து அந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறார்கள் அதோடு சமூக வலைதளங்களிலும் பலர் தங்களுக்கு பிடித்த கமெண்டுகளை பதிவிட்டு வருகிறார்கள்.

அமெரிக்க ராணுவ வீரர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் போலவே இருக்கிறார் என்று ஒருவர் குறிப்பிட்டிருக்கிறார்.

இன்னொருவர் இதோ உங்கள் நாடு அவர் தன்னுடைய நேரத்தை வீணாக்காமல் உயிர்களைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார் என்று தெரிவித்திருக்கிறார். இன்னொருவர் ஸ்டீவ் ஸ்மித் என்ன செய்கிறார் உண்மையில் இது மிகப்பெரிய வேலை என்று பதிவிட்டிருக்கிறார்.

மற்றொருவர் அமெரிக்க ராணுவத்தில் ஸ்டீவ் ஸ்மித் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கிடையில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் விளையாடும் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருக்கிறது.